Loading...
இன்று நள்ளிரவு உச்சமடையும் டார்ட் விண்கல் மழை; ஃபயர்பால்ஸ் காண்பது எப்படி?
டார்ட் விண்கல் மழை இன்று நள்ளிரவு தனது 2-வது உச்ச நிலையை அடைகிறது

இன்று நள்ளிரவு உச்சமடையும் டார்ட் விண்கல் மழை; ஃபயர்பால்ஸ் காண்பது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2026
06:45 pm

செய்தி முன்னோட்டம்

வானியல் ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிகழும் டார்ட் விண்கல் மழை இன்று நள்ளிரவு தனது 2-வது உச்ச நிலையை அடைகிறது. சூரியனை 3.3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வரும் Encke என்ற பனி விண்கல் விட்டுச் சென்ற துகள்கள் மீது பூமி கடந்து செல்லும்போது இந்த விண்கல் மழை உருவாகிறது. டார்ட் விண்கல் மழை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தெற்கு டார்ட்ஸ்: செப்டம்பர் 20 முதல் நவம்பர் 20 வரை தீவிரமாக இருக்கும். இதன் முதல் உச்சம் அக்டோபர் 14 அன்றும், 2-வது பிரதான உச்சம் இன்று நள்ளிரவு நிகழ்கிறது. வடக்கு டார்ட்ஸ்: அக்டோபர் 20 முதல் டிசம்பர் 10 வரை நீடிக்கும். இதன் உச்சம் நவம்பர் 11-12 தேதிகளில் நிகழும்.

சிறப்பு

ஃபயர்பால்ஸ் சிறப்பு என்ன?

மணிக்கு சுமார் 104,650 கி.மீ வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் துகள்கள், எரிந்து சாம்பலாகும்போது வானில் கோடுகள் போன்ற பிரகாசமான ஒளியை ஏற்படுத்துகின்றன.

பிற விண்கல் மழைகளுடன் ஒப்பிடும்போது, டார்ட்ஸ் விண்கல் மழையில் விண்கற்களின் எண்ணிக்கை குறைவாகவே (மணிக்கு சுமார் 5 விண்கற்கள்) இருக்கும்.

ஆனால், அதில் உருவாகும் விண்கற்கள் மிகப்பெரிய அளவிலான பாறைத் துகள்களாக இருப்பதால், அவை 'ஃபயர்பால்ஸ்' எனப்படும் வழக்கத்தை விட அதிக வெளிச்சம் கொண்டதாக விண்ணில் தோன்றும்.

பார்வை

விண்கல் மழையைக் காண்பது எப்படி?

இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை காண்பதற்கான சிறந்த நேரமாகும்.

Taurus Constellation அமைந்திருக்கும் தென்கிழக்கு திசையில் இக்கதிர்கள் வெளிப்படும்.

நட்சத்திரக் கூட்டத்தை நேரடியாகப் பார்க்காமல், வானத்தின் பரந்த பகுதியை நோக்க வேண்டும்.

நகர வெளிச்சங்கள் மற்றும் செயற்கை விளக்குகள் இல்லாத இருட்டான பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தொலைநோக்கிகள் எதுவும் இன்றி வெறும் கண்ணாலேயே இதைக் காணலாம்.

ADVERTISEMENT