LOADING...
இந்தியா வர்றதுக்கு முன்னாடி எலான் மஸ்க் போட்ட பிளான்! ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் உயரம் குறையுது; ஏன் தெரியுமா?
2026இல் செயற்கைக்கோள்களின் உயரத்தைக் குறைக்கிறது ஸ்டார்லிங்க்

இந்தியா வர்றதுக்கு முன்னாடி எலான் மஸ்க் போட்ட பிளான்! ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் உயரம் குறையுது; ஏன் தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2026
02:41 pm

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, ஒரு முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்தை அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் தனது அனைத்து செயற்கைக்கோள்களையும் பூமியின் குறைந்த சுற்றுப்பாதைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முழு விவரங்கள் இங்கே:-

பாதுகாப்பு

விண்வெளி பாதுகாப்பு மற்றும் வேக மேம்பாடு

இந்த நடவடிக்கையின் மூலம் ஸ்டார்லிங்க் இரண்டு முக்கிய இலக்குகளை அடைய விரும்புகிறது. விண்வெளி பாதுகாப்பு (Space Safety): செயற்கைக்கோள்கள் குறைந்த உயரத்தில் இயங்கும்போது, அவற்றின் ஆயுட்காலம் முடிந்த பிறகு பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எளிதில் எரிந்து சாம்பலாகிவிடும். இது விண்வெளிக் கழிவுகள் (Space Debris) உருவாவதைக் கணிசமாகக் குறைக்கும். குறைந்த லேட்டன்சி (Low Latency): செயற்கைக்கோள்கள் பூமிக்கு மிக அருகில் வருவதால், இணையத்தின் வேகம் அதிகரிப்பதோடு, தரவுப் பரிமாற்றத்தில் ஏற்படும் காலதாமதம் (Latency) குறையும். இது ஆன்லைன் கேமிங் மற்றும் வீடியோ அழைப்புகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

முன்னேற்பாடுகள்

இந்திய அறிமுகத்திற்கான முன்னேற்பாடுகள்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்க மத்திய அரசிடம் இருந்து தேவையான உரிமங்களைப் பெறுவதற்கான இறுதி கட்டப் பணிகளில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்க ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவைகளுக்கு ஸ்டார்லிங்க் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மாற்றம்

2026 இல் மாற்றம் ஏன்?

2026 ஆம் ஆண்டிற்குள் தனது நெட்வொர்க் கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்த ஸ்டார்லிங்க் இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, மலைப்பகுதிகள் மற்றும் இணைய வசதி இல்லாத கிராமப்புறங்களுக்கு அதிவேக இணையத்தைக் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கம். இந்த 'லோயரிங்' (Lowering) செயல்முறை மூலம் விண்வெளி விபத்துகளைத் தவிர்க்க முடியும் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement