LOADING...
குடியரசு தினம் 2026: குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவிற்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என தகவல்
சுபன்ஷு சுக்லாவிற்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என தகவல்

குடியரசு தினம் 2026: குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவிற்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2026
03:24 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இஸ்ரோவின் விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுக்கு நாட்டின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய இஸ்ரோ விண்வெளி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஆக்சியம்-4 என்ற தனியார் விண்வெளித் திட்டத்தின் பைலட்டாக சுபன்ஷு சுக்லா செயல்பட்டார். ஜூன் 26, 2025 அன்று ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இவர் விண்ணில் பாய்ந்தார்.

இந்தியர்

இரண்டாவது இந்தியர்

விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் இவராவார் (முதலாமவர் ராகேஷ் சர்மா). இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் கால் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமை இவரையே சாரும். லக்னோவைப் பூர்வீகமாகக் கொண்ட சுபன்ஷு சுக்லாவிற்கு, உத்தரப்பிரதேச மாநில அரசும் உயரிய கௌரவத்தை வழங்கியுள்ளது. உத்தரப்பிரதேச தின விழாவை முன்னிட்டு அவருக்கு உத்தரப்பிரதேச கௌரவ சம்மான் விருது வழங்கப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் மாநிலத்திற்குப் பெருமை சேர்த்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் லட்சியத் திட்டமான ககன்யான் விண்கலத்தில் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் சுபன்ஷு சுக்லாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement