ஃபோல்ட்6 மற்றும் ஃபிளிப்6 ஆகிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது சாம்சங்
சாம்சங்கின் 6வது தலைமுறை மடிக்கக்கூடிய மொபைல்போன்கள் இன்று வெளியிடப்பட்டது. ஃபோல்ட்6 மற்றும் ஃபிளிப்6 ஆகிய இரண்டு மாடல்களும் காட்சி தொழில்நுட்பம், பேட்டரி ஆயுள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது. கேலக்ஸி Z ஃபோல்ட்6 , ஒரு பெரிய, நீடித்த 7.8-இன்ச் மெயின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் விரைவான அணுகலுக்காக 6.4-இன்ச் கவர் திரையும் உள்ளது. சாம்சங் டிஸ்பிளேயின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. அதனால் இந்த ஸ்மார்ட் போன்களை எளிதாக மடிக்கவும் திறக்கவும் முடியும்.
இந்த ஸ்மார்ட் போன்களின் விலை என்ன?
கேலக்ஸி Z ஃபிளிப்6 கிளாசிக் கிளாம்ஷெல் வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கேலக்ஸி Z ஃபிளிப்6 ஸ்மார்ட் போன், 6.9-இன்ச் மெயின் டிஸ்ப்ளே மற்றும் 2.1-இன்ச் கவர் திரையுடன் வெளியாகி உள்ளது. மடக்கும் போது மொபைல்களில் பிரச்சனை ஏற்பட்டுவிடாமல் இருக்க, இதில் கீல் பொறிமுறைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன கேலக்ஸி Z ஃபோல்ட்6 ஸ்மார்ட் போன், $1,900 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது. கேலக்ஸி Z ஃபிளிப்6 ஸ்மார்ட் போன், $1,100 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது.