புதிய பட்ஜெட் 'கேலக்ஸி A05' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கும் சாம்சங்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பட்ஜெட் விலையிலான புதிய கேலக்ஸி A05 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். கருப்பு, பச்சை மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன்யுஐ 5.1 இயங்குதளத்தைப் பெற்றிருக்கும் கேலக்ஸி A05-ல், 6.5 இன்ச் LCD டிஸ்பிளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பின்பக்கம் 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் என டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 8MP செல்ஃபி கேராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு குறைந்தபட்சம் இரண்டு முதன்மையான ஆண்ட்ராய்டு அப்டேட்களாவது வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறது சாம்சங்.
சாம்சங்
சாம்சங் கேலக்ஸி A05: ப்ராசஸர் மற்றும் விலை
இந்த பட்ஜெட் A05-ல் மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசஸரை பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். மேலும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்கிறது இந்த A05.
டூயல் சிம், 4G LTE, ஜிபிஎஸ், வை-பை, ப்ளூடூத் 5.3, டைப் சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஜாக் ஆகிய கணெக்டிவிட்டி வசதிகளை புதிய கேலக்ஸி A05 ஸ்மார்ட்போனில் வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலை ரூ.9,999 விலையிலும், 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலை ரூ.12,499 விலையிலும் வெளியிட்டிருக்கிறது சாம்சங்.