எப்படி இருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23': ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
சாம்சங்கின் ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் சீரிஸான S23 சீரிஸின் அடிப்படை மாடல் தான் S23.
அம்சங்கள்:
6.1 இன்ச் Super AMOLED டிஸ்பிளே
குவாஸ்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர்
50 MP + 10 MP + 12 MP ரியர் கேமரா: 12 MP செல்ஃபி கேமரா
3,900 mAh பேட்டரி
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
ஆண்ட்ராய்டு 13
5G
விலை: 8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.74,999
8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.79,999
ரிவ்யூ
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
நீண்ட நேர கேமிங்கையும் கூட சூடாகாமல் கூலாகவே கையாளுக்கிறது S23-ன் ப்ராசஸர். எனினும், ஜென்ஷின் இப்பேக்ட் போன்ற மிக அதிக கிராபிக்ஸ் கொண்ட கேம்களின் போது மட்டும் கொஞ்சம் சூடாகிறது.
S22-வில் பயன்படுத்தியிருந்த அதே கேமராவையே இதிலும் பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். முன்பக்க கேமரா மட்டும் 10-ல் இருந்து 12 MP-க்கு அப்டேட் ஆகியிருக்கிறது.
சார்ஜ் ஆவதற்கு 1 மணி நேரம் 30 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. ப்ளாக்ஷிப் போனிற்கு இது கொஞ்சம் அதிகம் தான். முழுமையான சார்ஜில் ஒரு நாள் தான் பயன்படுத்த முடியும்.
இது ஒரு சிறப்பான போன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த விலைக்கு ஏற்ற மொபைல் போனா என்பது கேள்விக்குறி தான்.