LOADING...
ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தைக் குறைக்க பழைய லேண்ட்லைன் வடிவில் போன்; அறிமுகமான 3 நாட்களில் ₹1 கோடி வருமானம்
ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தைக் குறைக்க பழைய லேண்ட்லைன் வடிவில் போன் அறிமுகம்

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தைக் குறைக்க பழைய லேண்ட்லைன் வடிவில் போன்; அறிமுகமான 3 நாட்களில் ₹1 கோடி வருமானம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 01, 2025
03:47 pm

செய்தி முன்னோட்டம்

சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால் அதிகரித்துவரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர், பழைய கால லேண்ட்லைன் தொலைபேசி போன்ற வடிவமைப்பைக் கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளார். இந்த நாஸ்டால்ஜியா யோசனை, சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று, மூன்று நாட்களுக்குள் ₹1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அமரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனர் கேட் கோட்சே தனது ஸ்மார்ட்போனை எளிய தொழில்நுட்பம் கொண்ட ஒரு சாதனமாக மாற்ற விரும்பினார். 'லேண்ட்லைன் போன்கள் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும், அவற்றின் வயரைச் சுழற்றி நண்பர்களுடன் பேச முடியும்' என்று எண்ணிய அவர், திரையில் இருந்து விலகி இருக்கும் ஒரு வாய்ப்பைத் தேடினார்.

வரவேற்பு

சந்தையில் கிடைத்த ஆச்சரிய வரவேற்பு

இதன் விளைவாக, ஒரு லேண்ட்லைன் தொலைபேசியை எடுத்து, அதை புளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைக்கும் வகையில் மாற்றியமைத்து, புதிய சாதனத்தை உருவாக்கினார். இந்தச் சாதனம், ஃபேஸ்டைம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் வரும் அழைப்புகளுக்கான ஆடியோவை ஹேண்ட்செட்டிற்கு மாற்றிவிடும். மக்கள் மத்தியில் திரை நேரத்தைக் குறைப்பதற்கான தேவை அதிகரித்துள்ளதையே தனது சாதனம் பிரதிபலிப்பதாகக் கேட் கோட்சே கூறுகிறார். சமூகத்தில் அதிகரித்து வரும் பதட்டம் மற்றும் தனிமை உணர்வு ஆகியவற்றுக்கு ஸ்மார்ட்போன் அடிமைத்தனமே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஃபிசிக்கல் போன்

ஃபிசிக்கல் போன் அறிமுகம்

இதற்காக ஜூலை 2025 இல், அவர் தனது 'ஃபிசிக்கல் போன்' என்ற சாதனத்தை இணையத்தில் அறிமுகப்படுத்தினார். 15-20 முன்கூட்டிய ஆர்டர்களை மட்டுமே எதிர்பார்த்த அவருக்கு, எதிர்பாராதவிதமாக நூற்றுக்கணக்கான ஆர்டர்கள் குவிந்தன. மூன்று நாட்களுக்குள் ₹1 கோடிக்கும் அதிகமான விற்பனையை ஈட்டிய இந்தச் சாதனம், அக்டோபர் மாதத்திற்குள் 3,000க்கும் மேற்பட்ட யூனிட்களாக விற்பனையாகி ₹2.5 கோடி வருமானத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், தொழில்நுட்ப வேகத்தைக் குறைத்து அமைதியான வாழ்வைத் தேடும் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது.

Advertisement