NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் வெளியானது ரெட்மி 12 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வெளியானது ரெட்மி 12 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள்
    இந்தியாவில் வெளியானது ரெட்மி 12 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள்

    இந்தியாவில் வெளியானது ரெட்மி 12 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 02, 2023
    03:26 pm

    செய்தி முன்னோட்டம்

    புதிய ரெட்மி 12 மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி. இந்த ஸ்மார்ட்போனை 4G மற்றும் 5G ஆகிய இரண்டு கனெக்டிவிட்டி வேரியன்ட்களில் வெளியிட்டிருக்கிறது ரெட்மி.

    இந்த புதிய ஸ்மார்ட்போன்களில் 90Hz ரெப்ரெஷ் பேட் மற்றும் 240Hz டச் சேம்ப்ளிங் கொண்ட 6.79 இன்ச் டிஸ்பிளேவைக் கொடுத்திருக்கிறது ரெட்மி.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பின்பக்கம், 50MP ட்ரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 8MP செல்ஃபி கேமராவும் கொடுத்திருக்கிறது ரெட்மி. மேலும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரிக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    இத்துடன் வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, NFC மற்றும் யுஎஸ்பி டைப்-C ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், IP53 ரேட்டிங்கும் பெற்றிருக்கிறது ரெட்மி 12.

    ரெட்மி

    ரெட்மி 12 4G & 5G: ப்ராசஸர் மற்றும் விலை 

    ரெட்மி 12-ன் 4G வசதி கொண்ட மாடலில் மீடியாடெக் ஹீலியோ G88 ப்ராசஸரும், 5G வசதி கொண்ட மாடலில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ப்ராசஸரையும் பயன்படுத்தியிருக்கிறது ரெட்மி. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வெளியாகியிருக்கின்றன இந்த மாடல்கள்.

    4G வசதி கொண்ட மாடலின் அடிப்படை 4GB+128GB வேரியன்டானது ரூ.9,999 விலையிலும், 6GB+128GB வேரியன்டானது ரூ.11,499 விலையிலும் வெளியாகியிருக்கிறது.

    5G வசதி கொண்ட மாடலின் அடிப்படை 4GB+128GB வேரியன்டானது ரூ.11,999 விலையிலும், 6GB+128GB வேரியன்டானது ரூ.13,499 விலையிலும், 8GB+256GB வேரியன்டானது ரூ.15,499 விலையிலும் வெளியாகியிருக்கிறது.

    வரும் ஆகஸ்ட் 4 நண்பகல் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை துவங்குவதாக அறிவித்திருக்கிறது ரெட்மி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரெட்மி
    ஸ்மார்ட்போன்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரெட்மி

    12C ஸ்மார்ட்போன் மாடலில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெட்மி ஸ்மார்ட்போன்
    எப்படி இருக்கிறது ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ்?: ரிவ்யூ கேட்ஜட்ஸ் ரிவ்யூ

    ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் வெளியானது விவோவின் புதிய Y36 ஸ்மார்ட்போன் விவோ
    இந்தியாவில் வெளியாகவிருக்கும் மோட்டோரோலாவின் ஃபிளிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மோட்டோரோலா
    இணையத்தில் கசிந்த ஜியோ 5G ஸ்மார்ட்போன் டிசைன் ஜியோ
    ஆண்ட்ராய்டு vs ஐஓஎஸ், எளிய பயன்பாட்டைக் கொண்ட இயங்குதளம் எது? ஆண்ட்ராய்டு

    கேட்ஜட்ஸ்

    நத்திங் போன் (2).. எப்போது வெளியீடு, என்னென்ன வசதிகள்? ஸ்மார்ட்போன்
    கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.. என்ன எதிர்பார்க்கலாம்? கூகுள்
    கூகுள் I/O நிகழ்வு.. என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள்? கூகுள்
    கூகுளின் பிக்சல் டேப்லட்டை விட சிறப்பான வசதிகளைக் கொண்டிருக்கிறது ஒன்பிளஸ் பேடு, ஏன்? கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025