பேடு 2 டேப்லட் மற்றும் C53 ஸ்மார்ட்போனை வெளியிட்டது ரியல்மீ
இந்தியாவில் தங்களது புதிய ஸ்மார்ட்போனான C53 மற்றும் பேடு 2 டேப்லட் ஆகிய புதிய சாதனங்களை வெளியிட்டிருக்கிறது சீன மின்சாதன தயாரிப்பு நிறுவனமான, ரியல்மீ. பட்ஜெட் செக்மெண்டில் வெளியாகியிருக்கும் இந்த C53 ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 560 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சம் கொண்ட 6.74-இன்ச் LCD டிஸ்பிளே, பக்கவாட்டு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்கள் மற்றும் மினி கேப்சூல் வசதியையும் கொடுத்திருக்கிறது ரியல்மீ. யுனிசாக் T612 சிப்செட்டைக் கொண்ட இந்தப் புதிய ஸ்மார்ட்போனில், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் 4GB+128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டானது, ரூ.9,999 விலையிலும், 6GB+64GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டாது, ரூ.10,999 விலையிலும் வெளியாகியிருக்கிறது.
ரியல்மீ பேடு 2:
ரியல்மீ பேடு டேப்லட்டின் அப்டேட்டட் வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது இந்த ரியல்மீ பேடு 2 டேப்லட். இந்த புதிய டேப்லட்டில், 40Hz/ 60Hz/ 120Hz அடாப்டிவ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட 11.5 இன்ச் LCD டிஸ்பிளேவைக் கொடுத்திருக்கிறது ரியல்மீ. நான்கு ஸ்பீக்கர் கிரில்களுடன், டைப்-சி போர்டைக் கொடுத்திருக்கிறது. ஹீலியோ G99 சிப்பைக் கொண்டிருக்கும் இந்த பேடு 2-வில், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்ட 8,360mAh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது ரியல்மீ. பின்பக்கம் 20MP கேமராவும், முன்பக்கம் 8MP கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ரியல்மீ பேடு 2-வின், 6GB+128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.19,999 விலையிலும், 8GB+256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.22,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ.