Loading...
விமானத்தில் பவர் பேங்க் வெடிப்பது ஏன்? இண்டிகோ விமான சம்பவத்தின் பின்னணி; தப்பிப்பதற்கான முக்கியமான வழிகாட்டல்கள்
விமானத்தில் பவர் பேங்க்கை வெடிக்காமல் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்கள்

விமானத்தில் பவர் பேங்க் வெடிப்பது ஏன்? இண்டிகோ விமான சம்பவத்தின் பின்னணி; தப்பிப்பதற்கான முக்கியமான வழிகாட்டல்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2026
01:32 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியிலிருந்து சென்னை நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் ஓவர்ஹெட் லக்கேஜ் பின்னில் வைக்கப்பட்டிருந்த பயணியின் பவர் பேங்க் தீப்பிடித்து எரிந்ததால், விமானம் ஹைதராபாத்திற்குத் திருப்பப்பட்டது. கேபினுக்குள் புகை சூழ்ந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. லித்தியம்-அயன் பேட்டரி கொண்ட பவர் பேங்குகள் விமானப் பயணங்களின் போது ஏன் தீப்பிடிக்கின்றன, அவற்றால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு தற்போது அவசியமாகியுள்ளது.

காரணங்கள்

பவர் பேங்குகள் தீப்பிடிப்பதற்கான முதன்மைக் காரணங்கள்

பவர் பேங்குகளில் அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட லித்தியம் கோபால்ட் ஆக்சைடு (LCO) அல்லது லித்தியம்-அயன் செல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தரம் குறைந்த அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட போலி பேட்டரி செல்கள், உற்பத்தி குறைபாடுகள் மற்றும் உள்சுற்று மின்கசிவு (Internal Short Circuit) ஆகியவை தீ விபத்திற்கு முக்கியக் காரணமாகின்றன.

மேலும், விமானம் தரையிறங்கும் போது அல்லது உயரே பறக்கும் போது ஏற்படும் அதிர்வுகள், பேட்டரியின் எலக்ட்ரோலைட் கசிவு மற்றும் அதிக வெப்பம் ஆகியவை பேட்டரியை திடீரென வெடிக்கச் செய்கின்றன.

வழிகாட்டுதல்கள்

DGCA-வின் விமானப் பயண வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகள்

இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பவர் பேங்குகளை செக்-இன் பேக்கேஜில் வைக்க முற்றிலும் தடை விதித்துள்ளது.

ஏனெனில் விமானத்தின் சரக்கு அறையில் தீப்பிடித்தால் அதை உடனடியாகக் கட்டுப்படுத்துவது கடினம்.

கைப்பையில் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி உண்டு.

மேலும், விமானத்தின் ஓவர்ஹெட் லக்கேஜ் பின்னில் பவர் பேங்கை வைக்கக் கூடாது என்றும், பயணத்தின் போது பவர் பேங்கைப் பயன்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்யக் கூடாது என்றும் DGCA தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பயணிகள்

பயணிகள் பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு முறைகள்

பவர் பேங்குகளை எப்போதுமே 100% சார்ஜ் செய்யாமல், 80% வரை மட்டும் சார்ஜ் செய்து வைப்பது பேட்டரி மீதான அழுத்தத்தைக் குறைக்கும்.

பவர் பேங்குகளை 55°C-க்கு அதிகமான வெப்பம் உள்ள இடங்களில் வைக்கக் கூடாது.

பேட்டரி வீக்கம் அடைந்திருந்தாலோ, அதிகப்படியான வெப்பம் வெளியானாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ அந்தப் பவர் பேங்கைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தரமான, பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் வசதி கொண்ட பவர் பேங்குகளை மட்டுமே பயணிகள் வாங்க வேண்டும்.

ADVERTISEMENT