எப்படி இருக்கிறது போகோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. 'போகோ C51': ரிவ்யூ
தொடக்கநிலை செக்மெண்டில் தங்களுடைய போகோ C51 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது போகோ. இந்த செக்மெண்டில் நிறைய ஸ்மார்ட்போன்கள் போட்டியிட்டு வந்தாலும், வசதிகள் மற்றும் பெர்ஃபாமன்ஸில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது ஒரு சில மொபைல்களே. இந்த போகோ C51 எப்படி இருக்கிறது? பார்க்கலாம். வசதிகள்: 6.52 இன்ச் LCD டிஸ்பிளே மீடியாடெக் ஹீலியோ G36 ப்ராசஸர் 8MP டூயல் ரியர் கேமரா: 5MP செல்ஃபி கேமரா 5000 mAh பேட்டரி ரியர் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மைக்ரோ USB போர்ட் ஆண்ட்ராய்டு 13 கோ விலை: 4 GB ரேம் + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.6,999
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
மிகவும் சிம்பிளான நீட்டான டிசைனைக் கொண்டிருக்கிறது போகோ C51. கொஞ்சம் கணமாகவும் இருக்கிறது. பில்ட் குவாலிட்டி நன்றாக இருக்கிறது. விலை குறைவான ஃபோனாக இருந்தாலும் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் இருப்பது சிறப்பு. மிகவும் சிறப்பான டிஸ்பிளே என்று சொல்லிவிட முடியாது. எனினும், இந்த செக்மெண்டில், இந்த விலையில் இது சிறப்பான டிஸ்பிளே தான். ப்ளோட்வேர் இல்லாத சாஃப்ட்வேர் சிறப்பு. எனினும், இதன் இயங்குதளம் கொஞ்சமா மெதுவாகவே இருக்கிறது. பேட்டரி லைஃப் சூப்பர், சராசரிப் பயன்பாட்டுக்கு ஒன்றரை நாளுக்கு மேலேயே தாக்குப் பிடிக்கிறது. நீண்ட பேட்டரி லைஃப் மற்றும் நல்ல பில்ட் குவாட்டிக்காக இந்த போனை பரிந்துரை செய்யலாம். ஆனால், இதன் கேமரா மற்றும் பெர்ஃபாமன்ஸ் சுமார் தான்.