NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டைனோசரின் எச்சங்களை $45 மில்லியன் கொடுத்து வாங்கிய பணக்காரர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டைனோசரின் எச்சங்களை $45 மில்லியன் கொடுத்து வாங்கிய பணக்காரர்
    இந்த ஏலப்பொருள் புதிய சாதனையை படைத்தது

    டைனோசரின் எச்சங்களை $45 மில்லியன் கொடுத்து வாங்கிய பணக்காரர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 18, 2024
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    'அபெக்ஸ்' என்று அன்புடன் பெயரிடப்பட்ட ஸ்டெகோசொரஸின் புதைபடிவ எச்சங்கள் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் $44.6 மில்லியனுக்கு விற்கப்பட்டன.

    அதன் விற்பனை மதிப்பீடான $4-6 மில்லியனை விட அதிக விலைக்கு விற்பனையான இந்த ஏலப்பொருள், டைனோசர் புதைபடிவங்களுக்கான புதிய சாதனையை படைத்தது.

    முந்தைய சாதனையாக "ஸ்டான்" என்ற டைரனோசொரஸ் ரெக்ஸ் புதைபடிவம், 2020 இல் $31.8 மில்லியன் ஈட்டியது.

    அபெக்ஸின் கிட்டத்தட்ட முழுமையான புதைபடிவமானது 2022ஆம் ஆண்டில் கொலராடோவின் டைனோசர் நகருக்கு அருகிலுள்ள வணிக பழங்கால ஆராய்ச்சியாளர் ஜேசன் கூப்பருக்கு சொந்தமான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

    11 அடி உயரமும், மூக்கிலிருந்து வால் வரை 27 அடி அளவும் கொண்ட அபெக்ஸ், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் புதைபடிவங்களில் முழுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

    எதிர்கால திட்டங்கள்

    'Apex' ஐ அமெரிக்க நிறுவனம் ஆராய்ச்சிகளுக்கு கடனாக பெறலாம்

    இந்த மதிப்புமிக்க புதைபடிவத்தை சிட்டாடல் எல்எல்சியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அமெரிக்க பில்லியனர் கென் கிரிஃபின் வாங்கினார்.

    டைனோசர் புதைபடிவங்களின் விற்பனையானது, இத்தகைய உயர் ஏல விலைகளை வாங்க முடியாத அருங்காட்சியகங்கள் அல்லது ஆராய்ச்சி மையங்களில் இந்த மாதிரிகள் வைக்கப்பட வேண்டும் என்று நம்பும் கல்விசார் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தூண்டுகிறது.

    இந்தக் கவலைகளுக்கு விடைதரும் வகையில், இந்த புதைவடிவத்தை வாங்கியவர் அமெரிக்க நிறுவனத்திற்கு அபெக்ஸைக் கடனாகப் தந்து, ஆராய விரும்புவதாக ஏல நிறுவனமான Sotheby's வெளிப்படுத்தியது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏலம்
    நியூயார்க்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    ஏலம்

    வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு  தாவூத் இப்ராஹிம்

    நியூயார்க்

    நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்  அமெரிக்கா
    ரூ. 204 கோடிக்கு வைர நெக்லெஸ் அணிந்து வந்த  பிரியங்கா சோப்ரா; அதை அவர் என்ன செய்ய போகிறார் தெரியுமா?  பாலிவுட்
    தீபாவளியை விடுமுறை நாளாக அங்கீகரிக்க இருக்கும் நியூயார்க் நகரம்  அமெரிக்கா
    பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025