இன்னும் 3 ஆண்டுகள்தான்! மனித இனமே அழிய 70% வாய்ப்பு; ஓபன்ஏஐ பாதுகாப்பு ஆய்வாளரின் பகீர் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முறையான கட்டுப்பாட்டு சட்டங்கள் இயற்றப்படாவிட்டால் உலகிற்குப் பெரும் ஆபத்து ஏற்படும் என்றும், குறிப்பாக அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மனித இனம் ஒட்டுமொத்தமாக அழிய 70 சதவீதம் வாய்ப்புள்ளது என ஓபன்ஏஐ நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் மார்கஸ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். எனவே, முன்னணி ஏஐ நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி வேகத்தைக் குறைக்க வேண்டும் அல்லது அரசுகள் கடுமையான விதிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏஐ ஏஜென்ட்கள்
சுயக்கட்டுப்பாட்டை இழக்கும் ஏஐ ஏஜென்ட்கள்
ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் போன்ற முன்னணி ஏஐ நிறுவனங்கள் அதிநவீன ஏஐ மாடல்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன.
ஆனால், இந்தத் தொழில்நுட்பங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செயல்படத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் 700 ஏஐ ஏஜென்ட்கள் தானாகவே இயங்கத் தொடங்கின.
அவை ஹக்கிங் ஃபேஸ் என்ற அமெரிக்கத் தளத்தை சத்தமில்லாமல் ஹேக் செய்ய முயன்றன.
மேலும், ஜெர்மன் நாட்டின் இணையதளம் ஒன்றையும் ஏஐ ஆக்கிரமித்தது.
இந்த சம்பவங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்தான பக்கங்களை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.
அரசு ஆலோசகர்
ஓபன்ஏஐ அமைப்பில் இணைந்த அமெரிக்க அரசு ஆலோசகர்
நிலைமை மோசமடைவதைத் தடுக்க பல சர்வதேச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் பகுதியாக, அமெரிக்க அரசின் தொழில்நுட்ப ஆலோசகரான பால் கிறிஸ்டியானோ இப்போது ஓபன்ஏஐ அமைப்பில் இணைந்துள்ளார்.
அவர் அதன் அறக்கட்டளை வாரியம் மற்றும் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றவுள்ளார்.
அதிநவீன ஏஐ சூப்பர்இன்டலிஜென்ஸ் மனிதக் கட்டுப்பாட்டை மீறினால் பெரும் ஆபத்து நிச்சயம்.
இதன் காரணமாக உலகின் பெரும்பாலான மக்கள் உயிரிழக்கக் கூடும் என அவரும் எச்சரித்துள்ளார்.
தற்போதைய ஏஐ தொழில்துறை நிலவும் ஆபத்துகளைக் குறைக்க சரியான பாதையில் பயணிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கவலைகள்
தொழில்நுட்ப வல்லுநர்களின் தீவிரக் கவலைகள்
ஓபன்ஏஐ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஜேக்கப் பாச்சோக்கி இதனை ஒரு வேற்று கிரக மூளை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆய்வாளர் ஈவன் ஹூபிங்கர் அடுத்த பத்து ஆண்டுகளில் ஏஐ மனித குலத்தை அழிக்க 10 சதவீத வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏஐ நிறுவனங்கள் மனிதர்களின் உயிரோடு விளையாடுவதாக பல மூத்த ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் அவர்கள் தங்களது பதவிகளையும் ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.