அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது 'ஒன்பிளஸ் ஓபன்' ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்
சாம்சங் மற்றும் கூகுளைத் தொடர்ந்து, உலகளவில் முன்னணி ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனமும் தங்களுடைய புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது. ஒன்பிளஸ் ஓபன் எனக் குறிப்பிடப்படும் தங்களது புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை, வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஒன்பிளஸ். மூன்று நிலைகளைக் கொண்ட அலர்ட் ஸ்லைடர், நவீன ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களுடன் மிகவும் எடை குறைவான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக இந்த ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் தயாரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஓப்போவின் முந்தைய ஃபோல்டபிள் ஸ்மாட்போனான ஃபைண்டு N2-வில் பயன்படுத்தப்பட்டதை விட 37% சதவிகிதம் சிறிய ஹின்ஜை தங்களுடைய ஓபன் ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கவிருக்கிறது ஒன்பிளஸ் ஓபன்?
120Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்ட 7.82 இன்ச் AMOLED உட்புற திரை மற்றும் 6.31 இன்ச் AMOLED வெளிப்புறத் திரைகளை ஓபன் ஸ்மார்ட்போனில் கொடுத்திருக்கிறது ஒன்பிளஸ். ஒன்பிளஸ் ஓபனின் வட்டவடிவ பின்பக்க கேமரா மாடியூலில், 48MP முதன்மை கேமரா, 48MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. மேலும் செல்ஃபிக்காக வெளிப்புற திரையில் 32MP கேமாரவும், உட்புற திரையில் 20MP கேமராவும் கொடுக்கப்படவிருக்கின்றன. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸருடன், 16MP ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் வசதியையும் புதிய ஒன்பிளஸ் ஓபன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் கொடுக்கவிருக்கிறது அந்நிறுவனம்.
பிரத்தியேக நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு:
ஒன்பிளஸ். இந்தப் பாஸைப் பெற்றவர்களுக்கு, மும்பையில் நடைபெற்றும் ஒன்பிளஸ் ஓபன் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது அந்நிறுவனம். விரும்புபவர்கள் அந்த நிகழ்விலேயே புதிய ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்பும் அளிக்கப்படவிருக்கிறது. மேலும், அந்த நிகழ்வு மற்றும் முன்பதிவு காலத்தில் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2வை இலவசமாக அளிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஒன்பிளஸ். ஒன்பிளஸ் ஓபன் குறித்த விலை விபரங்கள் எதுவும் கசியவில்லை. எனினும், ரூ.1.41 லட்சம் விலையில் ஒன்பிளஸின் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.