Page Loader
ஒன்பிளஸ் பேடின் விலை என்ன.. அறிவித்தது ஒன்பிள்ஸ்! 
புதிய ஒன்பிளஸ் பேடின் விலையை அறிவித்து ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் பேடின் விலை என்ன.. அறிவித்தது ஒன்பிள்ஸ்! 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 25, 2023
03:28 pm

செய்தி முன்னோட்டம்

ஒன்பிளஸ் பேடை (Oneplus Pad) கடந்த பிப்ரவரி மாதம் தங்களது கிளவுடு 11 நிகழ்வின் மூலம் இந்தியாவில் வெளியிட்டது ஒன்பிளஸ். ஆனால், அதன் விலை மற்றும் எப்போது முன்பதிவு செய்யலாம் என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் நிகழ்வின் போது வெளியிடவில்லை. தற்போது அது குறித்த தகவல்களை அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஒன்பிளஸ் பேடை வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் வெளியாகியிருந்தது ஒன்பிளஸ் பேடு. அதில் 8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டிற்கு ரூ.37,999 விலையும், 12 GB ரேம் + 256 ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டிற்கு ரூ.39,999 விலையும் நிர்ணயம் செய்திருக்கிறது ஒன்பிளஸ்.

கேட்ஜட்ஸ்

வசதிகள் மற்றும் சலுகைகள்: 

11.61 இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட், ஆண்ட்ராய்டு 13, டால்பி விஷன், டால்பி அட்மாஸ், நான்கு ஸ்பீக்கர்கள், 9,510 mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவற்றை ஒன்பிளஸ் பேடில் வழங்கியிருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு, இஎம்ஐ மற்றும் நெட்பேங்கின் மூலம் ரூ.2,000 உடனடி சலுகையுடன் இந்த டேப்லட்டைப் பெற முடியும். எச்டிஎஃப்சி, எஸ்பிஐசி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், சிட்டி மற்றும் ஒன்கார்டு வாடிக்கையாளர்களுக்கு 12 மாதம் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது. மொபிக்விக் வாலட் மூலம் இதனை வாங்கினால் MBK2000 என்ற கோடைப் பயன்படுத்து ரூ.2,000 வரை கேஷ்பேக் பெற முடியும்.