நவம்பர் 23-ல் வெளியாகும் கேமிங் ஸ்மார்ட்போனான நூபியா ரெட் மேஜிக் 9 ப்ரோ
சீனாவைச் சேர்ந்த நூபிய (Nubia) ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம், தங்களுடைய புதிய ஸ்மார்ட்போனான 'ரெட் மேஜிக் 9 ப்ரோ' ஸ்மார்ட்போனை நவம்பர் 23ம் தேதி வெளியிடவிருக்கிறது. இம்முறை குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட்டுடன், தங்களது ப்ரீமியமான ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். நூபியா ரெட் மேஜிக் 8 ப்ரோ மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது ரெட் மேஜிக் 9 ப்ரோ. ட்ரிபிள் கேமரா செட்டப், கூலிங் ஃபேன் மற்றும் முந்தைய மாடலைப் போலவே அண்டர் டிஸ்பிளே கேமரா ஆகிய வசதிகளைக் கொண்டு புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூபியா ரெட் மேஜிக் 9 ப்ரோ:
பிரத்தியேகமாக கேமிங்கை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனானது, கேமிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசஸரைப் புதிய நெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியிருக்கிறது நூபியா. ஸ்டாண்டர்டாக 12GB ரேம் வசதியுடன் வழங்கப்படும் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோவில், 24GB ரேம் வசதி கொண்ட மாடலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோவில், ரெட்மேஜிக் ஓஎஸ்ஸைப் பயன்படுத்தியிருக்கிறது நூபியா.