சியோமியின் ஸ்மார்ட் பிஷ் டேங்க் மூலம், தொலைதூரத்தில் இருந்தும், மீன்களுக்கு உணவளிக்கலாம்
சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி, தனது மிஜியா ஸ்மார்ட் பிஷ் டேங்கை, சியோமி மால் வழியாக க்ரவுட் ஃபண்டிங் மூலமாக, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் மீன் தொட்டி, சீனா யன்-இல் 399 (தோராயமாக ரூ. 4,700) இல் விற்பனை செய்யப்படுகிறது, ஆனால் க்ரவுட் ஃபண்டிங் விலை சீனா யன்-349 (தோராயமாக ரூ. 4,000) ஆகும். இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, நீங்கள் தொட்டியில் உள்ள தண்ணீரை மாற்றாமல், ஆறு மாதங்கள் வரை எங்கும் செல்லலாம், அதோடு, தொலைதூரத்தில் இருந்தும் மீன்களுக்கு உணவளிக்கலாம். இந்த ஸ்மார்ட் மீன் தொட்டி, 16:9 அகல விகிதத்தைக் கொண்டுள்ளது மற்றும் தோராயமாக 7.3 கிலோ எடை கொண்டது.
சியோமியின் ஸ்மார்ட் ஃபிஷ் டேங்க்
இதில் ஒரு ஃபீடர் டேங்க், ஒரு சுய-சுத்திகரிப்பு மற்றும் ஆண்டி-க்ளோகிங் வாட்டர் பம்ப், ஒரு டெம்பரேச்சர் சென்சார் மற்றும் தண்ணீரை மாற்றும் அதிர்வை குறைக்க 5-அடுக்கு தொழில்முறை-கிரேடு கம்பார்ட்மென்டல் தொகுதி, ஆகியவை அடங்கும். மிஜியா ஸ்மார்ட் பிஷ் டேங், சூரிய வெளிச்சம், இரவு ஒளி மற்றும் பல போன்ற பல லைட்டிங் விருப்பங்களுடன் வருகிறது. இந்த மீன் தொட்டியை இயக்க, தனிப்பட்ட மிஜியா செயலியும் உள்ளது. இச்செயலியின் மூலம், நீங்கள் வெளியில் இருந்தாலும், மீன்களின் உணவின் அளவையும், அதன் கால அளவையும் கட்டுப்படுத்தலாம். லைட்டிங் நிலைமைகள் மற்றும் தொட்டியில் நீர் ஓட்டம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம்.