பூமியின் மையப்பகுதியில் உள்ள மென்படலத்தின் உருவாக்கம் குறித்து கண்டறிந்த விஞ்ஞானிகள்
பல ஆண்டு காலமாக பூமியின் மையப்பகுதியின் மேலேயிருக்கும் மென் படலம் ஒன்று அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராய் இருந்து வந்திருக்கிறது. 'எனிக்மாட்டிக் E பிரைம்' (Enigmatic E Prime) எனப்படும் இந்த மென்படலம் எப்படி உருவாகியிருக்கலாம் என்பது குறித்த விடையை தற்போது அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். நமது பூமியானது மூன்று அடுக்களால் ஆனாது. நாம் வாழும் மேல்பகுதியானது க்ரஸ்ட் (Crust) என அழைக்கப்படுகிறது. கிரஸ்டினைத் தொடர்நந்து, மேன்டிலும் (Mantle), அதனைத் தொர்ந்து பூமியின் மைப்பகுதியான கோரும் (Core) இடம்பெற்றிருக்கிறது. இவற்றில் கோரானது Inner Core மற்றும் Outer Core என இரண்டாகப் பிரித்தறியப்படுகிறது. இந்த வெளிப்பக்க கோர் மற்றும் மேன்டிலுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியிலேயே மேற்கூறிய எனிக்மாட்டிக் E பிரைம் மென்படலம் இடம்பெற்றிருக்கிறது.
எப்படி உருவானது 'எனிக்மாட்டிக் E பிரைம்' மென்படலம்:
பூமியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரானது, டென்டானிக் தகடுகளுக்கு இடையேயுள்ள இடைவெளியின் மூலமாக, பூமியின் மையப் பகுதியை நோக்கி பயணித்திருக்கிருக்கிறது. மேன்டில் வரை செல்லும் இந்த தண்ணீரானது பூமியின் மையப்பகுதியான கோரில் உள்ள சிலிக்கானுடன் வினைபுரிந்து சிலிக்கா மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் நிறைந்த எனிகமாட்டிக் E பிரைம் மென்படலத்தை உருவாக்கியிருக்கிறது. பல்லாண்டு கால வினைபுரிதலுக்குப் பிறகே இந்த மென்படலம் உருவாகியிருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள், இந்த ஆய்வு முடிவுகளை நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் வகையிலான வேதியியல் சாத்தியக்கூறுகளை ஆய்வகங்களில் உயர் அழுத்தப் பரிசோதனைகள் மூலம் செயல்படுத்திப் பார்த்திருக்கிறார்கள். இந்தப் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம், நாம் வாழும் பூமியைப் பற்றியும் அதன் உருவாக்கத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளவும் முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.