இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான 'யுவா 2'வை வெளியிட்டிருக்கிறது லாவா
செய்தி முன்னோட்டம்
தொடக்க நிலை மொபைல் பிரிவில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த லாவா நிறுவனம். தற்போது லாவா யுவா 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது லாவா.
90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் சின்க் டிஸ்பிளேவைப் பயன்படுத்தியிருக்கிறது லாவா. குறைவான பெசல்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை வழங்குவதற்கா இந்த சின்க் டிஸ்பிளேவை பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது லாவா.
பின்பக்கம் 13MP டூயல் AI கேமரா செட்டப்பும், முன்பக்கம் 5MP செல்ஃபி கேமராவும் புதிய யுவா 2-வில் வழங்கப்பட்டிருக்கின்றன. 10W சார்ஜிங் வசதியைக் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 3GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியுடன் வெளியாகியிருக்கிறது யுவா 2.
லாவா
லாவா யுவா 2: ப்ராசஸர் மற்றும் விலை
புதிய யுவா 2-வில் யுனிசாக் T606 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது லாவா. மேலும், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்கிரேடும், இரண்டு வருட பாதுகாப்பு அப்கிரேடைம் வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறது லாவா.
சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க, வாரண்டி காலத்தின் போது ஸ்மார்ட்போனில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், நேரடியாக வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
பின்பக்கம் கிளாஸ் பேக்குடன் ப்ரீமியமான லுக்கைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை, இந்தியாவில் ரூ.6,999 விலையில் வெளியிட்டிருக்கிறது லாவா. இந்த ஸ்மார்ட்போனை லாவாவின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திலும், பிற ஆன்லைன் விற்பனை தளங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.