கூகிளில் தேடக்கூடாத விஷயங்கள்; மீறினால், சட்ட சிக்கலில் சிக்குவீர்கள்
இணையதளத்தில் தேடப்படும் அனைத்து விஷயங்களும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக, கூகுள் போன்ற தேடுபொறிகளின் தேடல்களையும், அரசாங்கம் கண்காணிக்கிறது. இதில் தேடக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. மீறினால், சட்ட சிக்கலில் சிக்கி, சிறைக்குள் அடைக்கப்படலாம். 'வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?/ பிரஷர் குக்கர் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?': ஒரு தேடுபொறியில் இதுபோன்ற தகவல்களை தேடினால், அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகளின் ரேடாரில் சிக்குவீர்கள். மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தகவலை தேடினால், நாட்டின் பாதுகாப்பை கருதி, உங்களை கைது செய்ய நேரிடும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்கள்: இந்தியா உட்பட பல நாடுகளில், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் தொடர்பான உள்ளடக்கத்தைப் பார்ப்பது, சட்டத்திற்கு புறம்பானது என்பதால், இத்தகைய தேடல் உங்களை சட்ட சிக்கலில் சிக்க வைக்கும்.
கூகிள் தேடலில் தவிர்க்க வேண்டியவை
குற்றவியல் செயல்பாடு தொடர்பான கேள்விகள்: அபாயகரமான ஆயுத தயாரிப்பு பற்றியோ அல்லது ஒருவரை காயப்படுத்துவது போன்ற குற்றவியல் தொடர்பான தகவல்களை தேடினால், அது சட்டப்படி குற்றம். நாட்டில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் மற்றும் பிற பொருட்களைத் தேடுவதும் இதில் அடங்கும். கருக்கலைப்பு தொடர்பான தகவல்கள் தேடுவதைத் தவிர்க்கவும்: அடிக்கடி கருக்கலைப்பை பற்றி தேடினால், அதுவும் உங்களை சிக்கலில் ஆழ்த்த நேரிடும். ஏனென்றால், இந்தியாவில் உள்ள நடைமுறை வழிகாட்டுதல்கள் படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். அதுவும் சட்டப்படி வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே. பயங்கரவாத அமைப்பில் சேருவது: பயங்கரவாத அமைப்பில் சேருவது எப்படி என்று கூகுளில் பார்க்கத் துணியாதீர்கள். இதன் விளைவாக, நீங்கள் கடுமையான சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்வீர்கள்.