NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஹெர்பெஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட குரங்குடன் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட நியூராலிங்க் ஊழியர்கள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹெர்பெஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட குரங்குடன் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட நியூராலிங்க் ஊழியர்கள்?
    முன்னாள் ஊழியர் லிண்ட்ஸே ஷார்ட் தொடர்ந்துள்ள வழக்கு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது

    ஹெர்பெஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட குரங்குடன் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட நியூராலிங்க் ஊழியர்கள்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 18, 2024
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    எலான் மஸ்க்கின் நியூராலிங்க், ஒரு மூளை-கணினி இடைமுக தொடக்கம். இந்த நிறுவனத்தின் மீது தற்போது முன்னாள் ஊழியர் லிண்ட்ஸே ஷார்ட் தொடர்ந்துள்ள வழக்கு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    ஹெர்பெஸ் வைரஸைச் சுமந்துகொண்டிருக்கும் ஆய்வகக் குரங்குகளுடன் லிண்ட்ஸ் ஷார்ட் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், ஊழியர்களில் ஒருவரை அந்த குரங்கு கீறியதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

    அதோடு லிண்ட்ஸ் ஷார்ட் தனது கர்ப்பத்தைப் பற்றி தனது மேனேஜர்களுக்கு தெரிவித்த பிறகு, நியூராலிங்கில் இருந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் வழக்கில் தெரிவித்துள்ளார்.

    நியூராலிங்க் நிறுவனம் பழிவாங்கல், தவறான பணிநீக்கம் மற்றும் பாலின பாகுபாடு போக்கினை கடைபிடிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

    பணிச்சூழல்

    பணியாளர்களுக்கு விரோதமான பணிச்சூழல் எனக்குற்றச்சாட்டு

    இந்த வழக்கு நியூராலிங்கில் நிலவும் மோசமான வேலை நிலைமைகள் பற்றிய பார்வையை வழங்குகிறது.

    லிண்ட்ஸே ஷார்ட் கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டவுடன், "குற்றம், அவமானம் மற்றும் சாத்தியமற்ற காலக்கெடுக்கள் நிறைந்த பணிச்சூழலை" விவரித்தார்.

    விலங்குகளுடன் பாதுகாப்பாக வேலை செய்ய போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

    லிண்ட்ஸே மீண்டும் மருத்துவ சிகிச்சை பெற வலியுறுத்தினால் "கடுமையான பின்விளைவுகளை" சந்திக்க நேரிடும் என அவரது முதலாளி மிரட்டியதாக வழக்கு மேலும் கூறியது.

    விலங்கு பரிசோதனை

    நியூராலிங்கின் ஆய்வகங்களில் சோதனைக்குட்படுத்தப்படும் குரங்குகள்

    ஆய்வக குரங்குகளை நியூராலிங்க் பயன்படுத்துவது பல நாட்களாக சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.

    கடந்த ஆண்டு வெளியான WIRED இன் அறிக்கைபடி, நியூராலிங்க் சிப்புகள் பொருத்தப்பட்ட பிறகு, 12 ரீசஸ் மக்காக்குகள் மூளை வீக்கம், சுய-தீங்கு விளைவிக்கும் நடத்தை மற்றும் பகுதி முடக்கம் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறியது.

    இதனால் விலங்குகள் கருணைக்கொலை செய்யப்பட்டன.

    எனினும் எலான் மஸ்க் இந்த அறிக்கைகளை மறுத்துள்ளார். குரங்குகள் தனது கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் வழங்காமல், நோய்வாய்ப்பட்டதாகக் கூறினார்.

    விசாரணை

    நியூராலிங்கின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் விசாரணை செய்கிறது

    குரங்குகளின் மூளையில் இருந்து அகற்றப்பட்ட சிப்புகள் சட்டவிரோதமாக நகர்த்தப்பட்டதாகக் கூறப்படும் நியூராலிங்க் மீது அமெரிக்க போக்குவரத்துத் துறையும் விசாரணை நடத்தியது.

    இவை ஹெர்பெஸ் பி போன்ற நோய்க்கிருமிகளாலும், ஸ்டேஃபிலோகோகஸ் மற்றும் க்ளெப்சில்லா போன்ற பிற கொல்ல முடியாத பாக்டீரியாக்களாலும் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

    லிண்ட்ஸே ஷார்ட்டின் குற்றச்சாட்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல.

    மஸ்க் நிறுவனங்களில் பாலினப் பாகுபாடுகள் நடப்பதாக முன்னர் செய்திகள் வந்துள்ளன. தற்போது இவரது வழக்கு தொடர் புகார்களில் சமீபத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலான் மஸ்க்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    எலான் மஸ்க்

    2024 ஜனவரிக்குள் இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் 'டெஸ்லா'? டெஸ்லா
    ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் இயக்கத்தில் உருவாகும், எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு ட்விட்டர்
    லிங்க்டுஇன் தளத்திற்குப் போட்டியாக எக்ஸின் புதிய வேலைவாய்ப்புத் தளம் எக்ஸ்
    யூத எதிர்ப்பு கருத்தை ஆமோதித்த எலான் மஸ்க்.. கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025