Page Loader
மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கூட்டி செல்லும் ராக்கெட்டை செய்துவரும் NASA 
NASA, $725,000 முதலீடு செய்துள்ளது

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கூட்டி செல்லும் ராக்கெட்டை செய்துவரும் NASA 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 12, 2024
09:37 am

செய்தி முன்னோட்டம்

பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகம், விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் இருக்கிறது. மனிதர்களை அங்கே தங்க வைக்கமுடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளில் உலக நாடுகள் இறங்கியிருக்கும் வெளியில், நாசா அதற்கு அடுத்துகட்டத்திற்கு நகர்ந்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதில் உள்ள முக்கியத் தடைகளில் ஒன்றான பயண நேரத்தை குறைகூடிய ராக்கெட்டை வடிவமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக NASA, $725,000 முதலீடு செய்துள்ளது.

ஆபத்து

அதிக நேரம் விண்வெளியில் இருப்பதால் ஆபத்து

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு, மார்ஸிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும். இத்தனை நாட்கள் விண்வெளி வீரர்கள், விண்வெளிப் பயணத்தில் நேரம் செலவிடுவது அவர்களுக்கு பெரிய உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், நீண்ட நேரம் விண்வெளியில் பயணிப்பதால், சூரிய வெளிச்சத்தின் தாக்கம் மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு, பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின் தீங்கான விளைவுகள் மற்றும் நீண்ட கால தனிமைப்படுத்தலுக்கு ஆளாக நேரிடும். விண்வெளியில் ஆறு மாதங்கள் செலவழிக்கும் விண்வெளி வீரர்கள் தோராயமாக 1,000 மார்பு எக்ஸ்-கதிர்களின் அளவு கதிர்வீச்சுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களுக்கு புற்றுநோய், நரம்பு மண்டல சேதம், எலும்பு இழப்பு மற்றும் இதய நோய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

பயணம்

பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில் நாசா 

கதிர்வீச்சு வெளிப்பாடு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் சுகாதார விளைவுகளை குறைக்க சிறந்த வழி பயணத்தின் நீளத்தை குறைப்பதாகும். நாசா தற்போது பல்ஸ்டு பிளாஸ்மா ராக்கெட்டை (பிபிஆர்) உருவாக்க உள்ளது. இது செவ்வாய் கிரகத்திற்கான சுற்றுப் பயணத்தை இரண்டு மாதங்களாகக் குறைக்கும் புதிய அமைப்பு ஆகும். PPR என்பது ஒரு உந்துவிசை அமைப்பாகும். இது அதிக வெப்பமடையும் பிளாஸ்மாவின் துடிப்பைப் பயன்படுத்தி அதிக உந்துதலை மிகவும் திறமையாக உருவாக்குகிறது. இது தற்போது நாசா இன்னோவேட்டிவ் அட்வான்ஸ்டு கான்செப்ட்ஸ் (என்ஐஏசி) திட்டத்தால் நிதியளிக்கப்பட்ட வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்த இரண்டாம் கட்ட ஆய்வு இந்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது என்ஜின் வடிவமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது