Page Loader
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் அழகான புகைப்படத்தைப் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட நாசா
சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் அழகான புகைப்படத்தைப் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட நாசா

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 20, 2023
11:28 am

செய்தி முன்னோட்டம்

விண்வெளியில் நமது சூரிய குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு பொருட்களையும் அவ்வப்போது படம் பிடித்து வெளியிடுவது நாசாவின் வழக்கம். அப்படி நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பூமியின் புகைப்படம் ஒன்று பலதரப்பட்ட இன்ஸ்டா பயனாளர்களையும் கவர்ந்திருக்கிறது. கடந்த நவம்பர் 14ம் தேதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது நாசா. அமெரிக்காவின் மேற்கு பக்கத்திலிருந்து மேலே 418 கிமீ தூரத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் நிலை கொண்டிருந்த போது அந்தப் புகைப்படத்தை எடுத்ததாகப் பதிவிட்டிருக்கிறது நாசா. அந்தப் புகைப்படத்தில் அமெரிக்கா, பூமியின் தொடுவானம் (Horizon) மற்றும் நிலவு ஆகியவை இடம்பெற்று அழகாகத் காட்சி தருகின்றன.

Instagram அஞ்சல்

நாசா பகிர்ந்து கொண்ட புகைப்படம்:

அறிவியல்

மெல்லிய கீற்றாகத் தொடுவானம்: 

நாசா பகிர்ந்த புகைப்படத்தில் பூமியின் தொடுவானமானது மெல்லிய ஒளிகீற்றாகக் காட்சி தருகிறது. இந்த ஒளிக்கீற்றை Airglow என அழைக்கின்றனர் அறிவியலாளர்கள். பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் சூரியனின் புறஊதாக் கதிர்களால் பகலில் ஆற்றலடைகின்றன. பின்னர் இரவில் அந்த ஆற்றலானது ஒளியாக வெளிப்படுகிறது. இப்படி வளிமண்டல மூலக்கூறுகளால் வெளியிடப்படும் ஒளியை வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆனால், புகைப்படக்கருவி மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களில் இந்த ஒளியினை நாம் பார்க்கலாம். நாசா பகிர்ந்த புகைப்படத்திலும் அந்த ஒளியே பூமியின் அடிவானமாகக் காட்சி தருகின்றது. மேலும், அந்தப் புகைப்படத்தில் அமைந்திருக்கும் அமெரிக்க நகரங்கள் குறித்த தகவல்களையும் தங்களுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறது நாசா.