நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. அந்த வகையில், வியாழனை சுற்றியுள்ள ட்ரோஜன் சிறுகோள்களை ஆய்வு செய்வதற்காக லூசி என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நாசாவின் லூசி விண்கலம் இப்போது அதன் 4 பில்லியன் மைல் பயணத்தில் ஒரு புதிய சிறுகோள் இலக்கைக் கொண்டுள்ளது. இந்த விண்கலம் வெளிப்புற சூரிய குடும்பத்தில் இருந்து தோன்றியதாக கருதப்படும் "மர்மமான" ட்ரோஜன் சிறுகோள்களில் சிலவற்றை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. லூசியின் முதல் சந்திப்பு 2025-ம் ஆண்டு செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் உள்ள மெயின் பெல்ட்டில் டொனால்ட் ஜோஹன்சன் என்ற சிறுகோளுடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லூசி விண்கலம் புதிய கோளை கண்டறிந்துள்ளது
ட்ரோஜன் சிறுகோள்கள் வியாழன் கிரகத்தின் அதே தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன. மேலும், இவை பல பில்லியன் ஆண்டுகளாக சூரியனைச் சுற்றியுள்ள மாபெரும் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஈர்ப்பு விசையால் சிக்கிக்கொண்டன. இந்த விண்வெளி பாறைகள் நீண்ட காலமாக ஈர்ப்பு விசையில் நிலையானதாக இருப்பதால், அவை நமது சூரிய குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கடந்த காலங்களில், குறைந்த செயல் திறன் மற்றும் வெற்று இடத்தின் நிறைய படங்களை லூசி கண்டுபிடித்தது என முதன்மை ஆய்வாளர் ஹால் லெவிசன் கூறினார். இவை, சிறுகோளை தானாக கண்காணிக்க இந்த புதுமையான மற்றும் சிக்கலான அமைப்பைப் பயன்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.