600 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸியை படம்பிடித்த நாசா!
செய்தி முன்னோட்டம்
ஜெல்லி மீன் போன்ற வடிவமைப்பைக் கொண்ட கேலக்ஸி ஒன்றினைப் படம்பிடித்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி.
பூமியில் இருந்து 600 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கக்கூடிய வீண்மீண் கூட்டத்தில் இருக்கும் இந்த கேலக்ஸிக்கு JO204 எனப் பெயரிட்டுள்ளது நாசா.
1990-ல் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதில் இருந்து 40,000-க்கும் மேற்பட்ட விண்வெளிப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்த ஹபுள் தொலைநோக்கியின் சமீபத்திய கண்டுபிடிப்பு தான் இந்த கேலக்ஸி.
ஜெல்லி மீனிற்கு இருக்கும் கொடுக்குகள் போன்ற அமைப்பு இந்த கேலக்ஸிக்கும் இருப்பதால், இதற்கு அந்தப் பெயரை (JO - Jellyfish Object) சூட்டியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு இந்த கேலக்ஸி வைத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
விண்வெளி
எப்படி ஜெல்லி மீன் போன்ற தோற்றம் உருவாகிறது?
விண்வெளியில் இந்த வகையான கேலக்ஸிக்கள் சுற்றி வரும் போது, அந்த இயக்கத்தினால் கேலக்ஸியின் மீது ஒருவிதமான அழுத்தம் உணரப்படுகிறது. இதனை 'Ram Pressure' எனக் குறிப்பிடுகிறார்கள்.
இந்த அழுத்தத்தின் காரணமாக கேலக்ஸியின் ஓரத்தில் குறைவான விசையுடன் சேர்ந்திருக்கும் வாயுக்கள், கேலக்ஸியில் இருந்து பிரிகின்றன. அப்படி பிரியும் வாயுக்களே ஜெல்லி மீனின் கொடுக்கள் போன்ற தோற்றமளித்து, கேலக்ஸிக்கு ஜெல்லி மீன் போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.
இப்படி அழுத்தத்தின் காரணமாக கேலக்ஸியில் இருந்து பிரியும் வாயுக்கள், அந்த அழுத்தத்தின் காரணமாகவே புதிய நட்சத்திரங்களாக உருவாகின்றன.