LOADING...
பிக் பாஸ் வீட்டில் VJ பார்வதிக்கும், திவகாருக்கும் வெடித்த மோதல்: அத்தனையும் நடிப்பா?
பிக் பாஸ் வீட்டில் VJ பார்வதிக்கும், திவகாருக்கும் வெடித்த மோதல்

பிக் பாஸ் வீட்டில் VJ பார்வதிக்கும், திவகாருக்கும் வெடித்த மோதல்: அத்தனையும் நடிப்பா?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2025
04:41 pm

செய்தி முன்னோட்டம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியின் தேர்வு பெருமபாலான மக்களிடையே அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. காரணம், இந்த சீசனின் போட்டியாளர்கள் பலர் யாரும் அறிந்திடாதவர்கள் மட்டுமல்ல, சர்ச்சையான சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள். அவர்களில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர், அரோரா சின்க்ளேர் உள்ளிட்டவர்களும் அடக்கம். வீட்டிற்கு வந்த முதல் வாரத்திலிருந்து இந்த போட்டியாளர்கள் செய்யும் சேட்டைகளும் லீலைகளும் பார்வையாளர்களிடத்தில் நேர்மறை விமர்சனத்தையே பெற்று வருகிறது.

மோதல்

திவாகர்- பார்வதி மோதல்

இந்த வீட்டில் ஆரம்பம் தொட்டே, VJ பார்வதி, திவாகரிடம் நல்ல நட்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் இவர்கள் இருவருக்கிடையே காரசாரமான மோதல் நடப்பது போல காட்டப்பட்டது. பலரும் இவர்களிடையே பெரிய சண்டை நடக்க போகிறது என எதிர்பார்த்த நிலையில், X-இல் வெளியான அன்சீன் வீடியோவில், இது இவர்கள் யோசித்த ஸ்ட்ராட்டஜியின் ஒரு பகுதி என தெரிய வந்துள்ளது. V.J.பார்வதியும், திவாகரம் ஒரு ஜூஸ் டாஸ்கிற்கு ஜட்ஜாக தேர்வானார்கள். பிக் பாஸ் இந்த போட்டியை எப்படி நடத்த வேண்டும் என இருவருக்கும் அறிவுறுத்தினார். அப்போது பார்வதி இந்த டாஸ்கின் போது தன்னுடைய ஸ்ட்ராட்டஜியை புகுத்தலாமா என கேட்டதிற்கு, அவர் ஆமாம் எனக்கூறியுள்ளார். அதன் தொடர்ச்சியே இந்த வாக்குவாதம் நடந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post