Loading...
ஆர்டெமிஸ் 2 விண்கலத்தின் 800 ஜிபி அறிவியல் தரவுகளை வெளியிட்ட நாசா: நிலவில் கண்டறியப்பட்ட 5 விசித்திர ஒளிப் புள்ளிகள்
ஆர்டெமிஸ் 2 விண்கலத்தின் 800 ஜிபி அறிவியல் தரவுகளை வெளியிட்ட நாசா

ஆர்டெமிஸ் 2 விண்கலத்தின் 800 ஜிபி அறிவியல் தரவுகளை வெளியிட்ட நாசா: நிலவில் கண்டறியப்பட்ட 5 விசித்திர ஒளிப் புள்ளிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
06:17 pm

செய்தி முன்னோட்டம்

நாசா, தனது சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II நிலவுப் பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் சேகரித்த 800 ஜிபிக்கும் அதிகமான அறிவியல் தரவுகளை பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. நாசாவின் பிளானட்டரி டேட்டா சிஸ்டம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த தரவுத் தொகுப்பில், விண்வெளி வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர் மற்றும் ஜெரமி ஹேன்சன் ஆகியோர் நிலவைச் சுற்றி வந்தபோது பதிவு செய்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நிலவின் மேற்பரப்பைக் கடந்து சென்றபோது, அதன் மேற்பரப்பில் 5 மங்கலான ஒளிப்புள்ளிகள் திடீரெனத் தோன்றி மறைந்ததை விண்வெளி வீரர்கள் நேரில் கண்டு பதிவு செய்துள்ளனர். விண்கற்கள் மற்றும் பாறைத்துகள்கள் நிலவின் மேற்பரப்பில் அதிவேகமாக மோதியதால் ஏற்பட்ட 'இம்பாக்ட் பிளாஷ்கள்' இவை என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பதிவு

11,000 படங்களும் 8.5 மணி நேர ஆடியோ பதிவுகளும்

நாசா வெளியிட்டுள்ள இத்தரவுத் தொகுப்பில், விண்வெளி வீரர்களின் கைகேமராக்கள் மற்றும் ஓரியன் விண்கலக் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளது.

அதோடு, விண்வெளி வீரர்கள் நிலவின் புவியியல் அம்சங்களை விவரிக்கும் 8.5 மணி நேர ஆடியோ பதிவுகள், நிலவின் பள்ளங்கள், முகடுகள் மற்றும் பழங்கால எரிமலைக் குழம்புப் பாதைகள் பற்றிய கைகுறிப்புகள் அடங்கிய வரைபடங்களும் உள்ளது.

சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற நிலவு கண்காணிப்பு பணியில், மனிதர்களின் நேரடிப் பார்வையின் மூலம் சேகரிக்கப்பட்ட இத்தரவுகள், பல தசாப்தங்களாக ரோபோடிக் விண்கலங்கள் அனுப்பிய தகவல்களுடன் ஒப்பிட்டு ஆராயப்படவுள்ளன.

இக்கோப்புகள், எதிர்காலத்தில் நிலவில் இறங்கவுள்ள மனிதப் பயணங்களுக்கு மிக முக்கிய வழிகாட்டியாக அமையும்.

ADVERTISEMENT