LOADING...
எலான் மஸ்க் பகிர்ந்த 'ஆர்ட்டெமிஸ் II' வீடியோ: மிரள வைக்கும் காட்சிகள்
எலான் மஸ்க் பகிர்ந்த 'ஆர்ட்டெமிஸ் II' வீடியோ வைரலாகிறது

எலான் மஸ்க் பகிர்ந்த 'ஆர்ட்டெமிஸ் II' வீடியோ: மிரள வைக்கும் காட்சிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2026
09:46 am

செய்தி முன்னோட்டம்

நிலவில் மனிதர்கள் கால் பதித்து 50 ஆண்டுகளுக்குப் மேலாகிவிட்ட நிலையில், நாசாவின் ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் நிலவை மிக நெருக்கமாகக் கடந்து சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். பூமியில் இருந்து சுமார் 4,00,000 கிலோமீட்டர் தொலைவில் நிலவின் சுற்றுப்பாதையில் மனிதர்கள் பயணிப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஆர்ட்டெமிஸ் II

ஆர்ட்டெமிஸ் II: நிலவை நெருங்கிய வரலாற்றுத் தருணம்

கடந்த ஏப்ரல் 1, 2026 அன்று விண்ணில் ஏவப்பட்ட ஆர்ட்டெமிஸ் II விண்கலம், திங்கள்கிழமை (ஏப்ரல் 6) நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து அதன் மேற்பரப்பை மிக நெருக்கமாகக் கடந்தது. விண்கலத்தில் இருந்த ஓரியன் (Orion) கேப்சூல், நிலவின் தரைப்பகுதியில் உள்ள பள்ளங்கள் மற்றும் மலைத்தொடர்களை மிகத் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. 1972-ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலவை இவ்வளவு அருகில் மனிதர்கள் காண்பது இதுவே முதல்முறை என்பதால், விண்வெளி ஆர்வலர்கள் இதனைப் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

தொடர்பு துண்டிப்பு

40 நிமிட தகவல் தொடர்பு துண்டிப்பு (Blackout)

இந்த பயணத்தின் மிக முக்கியமான மற்றும் சவாலான கட்டமாக, விண்கலம் நிலவின் மறுபக்கத்திற்கு (Far Side) சென்றபோது சுமார் 40 நிமிடங்கள் பூமியுடனான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நிலவு ஒரு தடையாக இருந்ததால் நாசாவின் ஆழ் விண்வெளி வலையமைப்பால் (Deep Space Network) விண்கலத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த 'பிளாக் அவுட்' காலத்தைக் கடந்து, விண்கலம் மீண்டும் ஆன்லைனுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள், நிலவின் இதுவரை காணப்படாத பல ரகசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. இந்தத் திட்டம் நிலவில் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் II வெற்றிகரமாக முடிந்து, வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பசிபிக் பெருங்கடலில் விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement