தள்ளுபடி விலையில் மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களுடைய ரேசர் 40 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் சீரிஸை வெளியிட்டது மோட்டோரோலா. இந்த சீரிஸின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம், ரேசர் 40 (Razr 40) மற்றும் ரேசர் 40 அல்ட்ரா (Razr 40 Ultra). இவற்றில் ரேசர் 40 மாடலை ரூ.59,999 விலையிலும், ரேசர் 40 அல்ட்ரா மாடலை 89,999 விலையிலும் வெளியிட்டிருந்தது மோட்டோரோலா. வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு, தற்போது இந்த ஃப்ளிப் போன்களை விலைகளை அதிரடியாகக் குறைத்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், அமேசான் தளத்தில் கூடுதல் தள்ளுபடிகளுடனும் அந்த ஸ்மார்ட்போன் தற்போது விற்பனையாகி வருகிறது.
தள்ளுபடி விலையில் மோட்டோரோலா ஃப்ளிப் போன்கள்:
மோட்டோரோலா நிறுவனம் தற்போது மேற்கூறிய இரு ஸ்மார்ட்போன்களின் விலைகளையும் ரூ.10,000 வரை குறைத்திருக்கிறது. இந்த விலைக் குறைப்பைத் தொடர்ந்து ரேசர் 40 ஸ்மார்ட்போனானது, ரூ.49,999 விலையிலும், ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது ரூ.79,999 விலையிலும் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. இதுதவிர, அமேசானிஸ் மோட்டோ டேஸ் (Moto Days) விற்பனை நிகழ்வையும் நடத்துகிறது மோட்டோ. டிசம்பர்-18 தொடங்கி டிசம்பர்-22ம் தேதி வரையிலான இந்த நிகழ்வின் போது மேற்கூறிய மோட்டோ போன்களை கூடுதல் தள்ளுபடியுடன் பெற முடியும். அதன்படி, ரேசர் 40 ஸ்மார்ட்போனானது ரூ.5,000 கூடுதல் தள்ளுபடியுடன் ரூ.44,999 விலையில் தற்போது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல்,ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் ரூ.7,000 கூடுதல் தள்ளுபடியுடன் ரூ.72,999 விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது.