இந்தியாவில் புதிய ரேஸர் 40 சீரிஸ் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது மோட்டோரோலா
இந்தியாவில் தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களான ரேஸர் 40 மற்றும் ரேஸர் 40 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா நிறுவனம். இந்தியாவில் சாம்சங் மற்றும் ஓப்போவுக்கு அடுத்தபடியாக ஃப்ளிப் ஸ்மார்ட்போனை வெளியிடும் மூன்றாவது நிறுவனமாக பட்டியலில் இணைகிறது மோட்டோரோலா. 144Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் pOLED டிஸ்பிளே மற்றும் 1.5-இன்ச் pOLED வெளிப்புற டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது ரேஸர் 40. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 ப்ராசஸர், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ், 64MP முதன்மை கேமரா, 13MP அல்ட்ரா-வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 4,200mAh பேட்டரி, 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு சார்ஜிங் ஆகிய வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது மோட்டோரோலா ரேஸர் 40.
மோட்டோரோலா ரேஸர் 40 சீரிஸ்: வசதிகள் மற்றும் விலை
ரேஸர் 40 சீரிஸின் டாப் எண்டான ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்போனானது, 144Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 3.6-இன்ச் pOLED வெளிப்புற டிஸ்பிளேவையும், 165Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.9 இன்ச் உட்புற டிஸ்பிளேவையும் கொண்டு வெளியாகியிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8+ஜென் 1 ப்ராசஸர், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ், 12MP முதன்மை கேமரா, 13MP அல்ட்ரா-வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 3,800mAh பேட்டரி, 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு சார்ஜிங் ஆகிய வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது மோட்டோரோலா ரேஸர் 40. இந்தியாவில் ரூ.59,999 விலையில் ரேஸர் 40-யும், ரூ.89,999 விலையில் ரேஸர் 40 அல்ட்ராவையும் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா. ஜூலை-15 முதல் அமேசான் தளத்தில் இதன் விற்பனை தொடங்குகிறது.