LOADING...
6,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 உடன் அறிமுகமாகும் Moto G24: பிப்., 7 முதல் விற்பனை தொடக்கம்
இந்த சாதனம், வரும் பிப்ரவரி 7 முதல் விற்பனைக்கு வரும்

6,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 உடன் அறிமுகமாகும் Moto G24: பிப்., 7 முதல் விற்பனை தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2024
05:50 pm

செய்தி முன்னோட்டம்

லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி24 பவரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்பகட்ட விலை ரூ.8,999என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம், வரும் பிப்ரவரி 7 முதல் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வரும். Moto G24 Power ஆனது அதிக புதுப்பிப்பு வீதக் காட்சி, பிரமாதமான ஆண்ட்ராய்டு அனுபவம் மற்றும் நீண்ட கால பேட்டரியுடன் கூடிய நுழைவு நிலை ஃபோனை, முதன்முறையாக போன் வாங்குபவர்களுக்காக வழங்குகிறது. மோட்டோ ஜி24 பவர் விலை, 4ஜிபி/128ஜிபி மாடலுக்கு ரூ.8,999, 8ஜிபி/128ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.9,999. இந்த போன் Glacier Blue மற்றும் Ink Blue வண்ணங்களில் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் இயங்குகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Moto G24