Page Loader
மோட்டோ G73 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
மோட்டோ G73 5G ரிவ்யூ

மோட்டோ G73 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

எழுதியவர் Prasanna Venkatesh
May 13, 2023
01:43 pm

செய்தி முன்னோட்டம்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல மோட்டோ G62 5G மாடலின் அப்டேட்டாகவும், 5G வசதி இல்லாத G72 மாடலுக்கு மாற்றாகவும் 'மோட்டோ G73 5G' மொபைலை இந்தியாவில் வெளியிட்டது மோட்டோ. வசதிகள்: 6.5 இன்ச் LCD டிஸ்பிளே மீடியாடெக் டைமன்சிட்டி 930 ப்ராசஸர் 50MP+8MP ரியர் கேமரா: 16MP செல்ஃபி கேமரா 5000 mAh பேட்டரி 13 5G-பேண்டுகள் ப்ளூடூத் 5.3 NFC வசதி ஆண்ட்ராய்டு 13 விலை: 8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.16,999 ப்ளஸ்: நல்ல பில்ட் குவாலிட்டி, IP52 ரேட்டிங் இருப்பது, ப்ளாட்வேர்கள் இல்லாத சாஃப்ட்வேர் மைனஸ்: LCD டிஸ்பிளே, சுமாரான பேட்டரி பெர்ஃபாமன்ஸ்.

மொபைல் ரிவ்யூ

பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது? 

இந்த G73-யில் பெர்ஃபாமன்ஸ் மற்றும் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் அளித்திருக்கிறது மோட்டோ. AMOLED டிஸ்பிளே இல்லாதது பெரிய மைனஸ். பார்ப்பதற்கு நல்ல டிசனை லாங்குவேஜோடு இருக்கிறது G73. சாஃப்ட்வேர் பயன்பாடு சிறப்பாக இருக்கிறது. கேமிங்கும் ஓகேவாக இருக்கிறது. கால் ஆஃப் ட்யூட்டி, அசால்ட் 9 லெஜன்ட்ஸ் உள்ளிட்ட கேம்களை லோ-கிராஃபிக்ஸில் விளையாட முடிகிறது. பேட்டரி பெர்ஃபாமன்ஸ் சுமாராகவே இருக்கிறது. கேமரா பெர்ஃபாமன்ஸ் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை. அதுவும் சுமார் தான். சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழித்தால் இதைவிட சிறப்பான வசதிகள் கொண்ட மோட்டோ G2 5G மொபைல் கிடைக்கும் போது, இதனை பரிந்துரை செய்யக் காரணம் ஏதும் இல்லை. மொத்தத்தில் விலைக்கேற்ற மொபைலாக இந்த G73 5G இல்லை.