LOADING...
நிலவுடன் ஒரே நேர்கோட்டில் கைகோர்க்கும் சனி மற்றும் நெப்டியூன்! இந்த அரிய வானியல் நிகழ்வை எப்படிப் பார்ப்பது?
நிலவுடன் ஒரே நேர்கோட்டில் கைகோர்க்கும் சனி மற்றும் நெப்டியூன்

நிலவுடன் ஒரே நேர்கோட்டில் கைகோர்க்கும் சனி மற்றும் நெப்டியூன்! இந்த அரிய வானியல் நிகழ்வை எப்படிப் பார்ப்பது?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 23, 2026
07:39 pm

செய்தி முன்னோட்டம்

வெள்ளிக்கிழமை இரவு (ஜனவரி 23) விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. சந்திரன், சனி மற்றும் நெப்டியூன் ஆகிய மூன்று வான் பொருட்கள் ஒரே நேர்க்கோட்டில் தோன்றும் முச்சந்திப்பு (Triple Conjunction) எனும் அரிய நிகழ்வு நிகழ உள்ளது. கோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இவை இருந்தாலும், பூமியிலிருந்து பார்க்கும்போது இவை ஒன்றாக நெருக்கமாகக் காட்சியளிக்கும். விண்வெளியில் மூன்று கோள்கள் அல்லது வான் பொருட்கள் ஒரே நேர்க்கோட்டில் (Right Ascension) வரும்போது இந்த முச்சந்திப்பு நிகழ்கிறது. இன்று சந்திரன், சனி மற்றும் நெப்டியூன் ஆகிய மூன்றும் மீனம் (Pisces) நட்சத்திரக் கூட்டத்தில் 4 டிகிரி இடைவெளியில் சந்திக்கின்றன. இதில் சந்திரன் இப்போது 26 சதவீதம் ஒளிர்ச்சியுடன் வளர்பிறை பிறை (Waxing Crescent) நிலையில் உள்ளது.

எப்படிப் பார்ப்பது?

வானியல் அதிசயத்தைக் காண நீங்கள் செய்ய வேண்டியவை

திசை: சூரிய மறைவுக்குப் பிறகு 30 முதல் 90 நிமிடங்களில் மேற்கு அல்லது தென்மேற்கு திசையை நோக்கிப் பாருங்கள். நேரம்: இந்தியாவில் உள்ளவர்கள் இன்று இரவு 8:30 மணிக்குள் இதைப் பார்ப்பது சிறந்தது. அதன் பிறகு இவை அடிவானத்திற்குக் கீழே சென்று மறைந்துவிடும். காணத் தேவையானவை: சந்திரனும் சனியும் வெறும் கண்களுக்கே தெளிவாகத் தெரியும். சனி கிரகம் ஒரு மஞ்சள் நிறப் புள்ளி போல மின்னும். ஆனால், நெப்டியூன் மிகவும் தொலைவில் உள்ளதால், அதைக் காண பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி தேவைப்படும்.

டிப்ஸ்

சிறந்த பார்வைக்கு சில டிப்ஸ்

இந்த நிகழ்வைச் சிறப்பாகக் காண நகரத்தின் வெளிச்சம் மற்றும் காற்று மாசுபாடு இல்லாத திறந்தவெளி இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், பிறை நிலவுக்கு மிக அருகிலேயே சனிக் கோளையும் நெப்டியூனையும் நீங்கள் காணலாம்.

Advertisement