LOADING...
ஆண்ட்ராய்டு பயனர்கள் கவனத்திற்கு: அவுட்லுக் லைட் செயலி நிறுத்தம்! மைக்ரோசாஃப்ட் எடுத்த அதிரடி முடிவு
அவுட்லுக் லைட் செயலி நிறுத்தம்

ஆண்ட்ராய்டு பயனர்கள் கவனத்திற்கு: அவுட்லுக் லைட் செயலி நிறுத்தம்! மைக்ரோசாஃப்ட் எடுத்த அதிரடி முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 13, 2026
04:46 pm

செய்தி முன்னோட்டம்

ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வழங்கிய அவுட்லுக் லைட் செயலி வரும் மே 25, 2026 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. குறைந்த வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் வேகம் குறைந்த இணைய வசதி உள்ள பகுதிகளில் பயன்படுத்துவதற்காக இந்த லைட் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து வசதிகளும் கொண்ட முதன்மை அவுட்லுக் மொபைல் செயலியில் அதிக கவனம் செலுத்த மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மே 25

மே 25க்கு பிறகு என்ன நடக்கும்?

அறிவிக்கப்பட்ட தேதியான மே 25, 2026க்கு பிறகு, உங்களால் அவுட்லுக் லைட் மொபைல் செயலியைத் திறக்க முடியுமே தவிர, அதில் உள்ள ஈமெயில்கள், காலண்டர் அல்லது இணைப்புகளை அணுக முடியாது. மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே அக்டோபர் 6, 2025 முதல் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்தப் புதிய பதிவிறக்கங்களைத் தடுத்துள்ளது. தற்போது இந்த செயலியைப் பயன்படுத்தி வருபவர்கள், தங்களது தகவல்களைத் தடையின்றிப் பெற உடனடியாக அவுட்லுக் மொபைல் செயலிக்கு மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்ய வேண்டியவை

பயனர்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் அவுட்லுக் லைட் செயலியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றித் தடையற்ற சேவையைப் பெறலாம்: Upgrade வசதி: அவுட்லுக் லைட் செயலிக்குள் இருக்கும் 'Upgrade' ஆப்ஷனைப் பயன்படுத்தினால், அது உங்களை நேரடியாகப் பிளே ஸ்டோருக்கு அழைத்துச் சென்று அவுட்லுக் மொபைல் செயலியைப் பதிவிறக்க உதவும். மேனுவல் இன்ஸ்டால்: நேரடியாகப் பிளே ஸ்டோர் சென்று 'Microsoft Outlook' செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் பழைய கணக்கின் மூலம் லாக்-இன் (Sign-in) செய்யலாம். டேட்டா பாதுகாப்பு: நீங்கள் அவுட்லுக் மொபைல் செயலிக்கு மாறும்போது, உங்கள் பழைய ஈமெயில்கள், காலண்டர் குறிப்புகள் மற்றும் கோப்புகள் எங்கும் போகாது. அனைத்தும் புதிய செயலியில் தானாகவே வந்துவிடும்.

Advertisement

காரணம்

ஏன் இந்த மாற்றம்?

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது மொபைல் சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அவுட்லுக் மொபைல் செயலி அதிக அம்சங்கள், சிறந்த பாதுகாப்பு வசதிகள் மற்றும் மைக்ரோசாஃப்ட் 365 சேவைகளுடன் ஆழமான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. சந்தையில் தற்போது வரும் ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்களும் அவுட்லுக் மொபைல் செயலியை சிறப்பாக இயக்கும் திறன் கொண்டிருப்பதால், தனிப்பட்ட லைட் செயலி இனித் தேவையில்லை என மைக்ரோசாஃப்ட் கருதுகிறது.

Advertisement

குறிப்பு

ஐடி நிர்வாகிகளுக்கான குறிப்பு

நிறுவனங்களின் ஐடி நிர்வாகிகள் தங்களது ஊழியர்களுக்கு இந்த மாற்றம் குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த மாற்றத்தின் போது பயனர் கணக்குகள் எதுவும் நீக்கப்பட மாட்டாது. ஆனால், மே 25க்கு பிறகு ஊழியர்கள் பணி தொடர்பான மின்னஞ்சல்களை அணுகுவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க, இப்போதே அவுட்லுக் மொபைல் செயலிக்கு மாற ஊக்கப்படுத்துவது நல்லது. குறிப்பாக, அவுட்லுக் லைட் ஆண்ட்ராய்டில் மட்டுமே இருந்தது, ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏற்கனவே முதன்மை செயலி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement