
மைக்ரோசாப்ட்டின் பிங் தேடலுக்கு, ChatGPT போன்ற தொழில்நுட்பத்தை கொண்டு வர திட்டம்
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேடுபொறியான பிங்கின் புதிய பதிப்பை வெளியிடுவதற்கான வேலைகளில், அந்நிறுவனம் மும்முரமாக உள்ளது.
அதில், ஓபன்ஏஐ (OpenAI)யால் தொடங்கப்பட்ட சாட் ஜிபிடி (ChatGPT) பயன்படுத்தும், செயற்கை நுண்ணறிவை உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம், தேடுதல் எளிமையாக்கப்படும் என கூறப்படுகிறது.
அதாவது, தேடப்படும் கேள்விகளுக்கு, இணைப்புகளால் பதில் அளிக்காமல், நேரடியாக விடை அளிக்குமாறு செயல்படும், எனவும் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட்டின் இந்த புதிப்பு, கூகிளிற்கு மாற்றாக அமையுமாறு வடிவமைக்க பெற்றுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய அம்சம், மார்ச் மாத இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், OpenAI இன் மென்பொருளை, Bing எவ்வாறு ஒருங்கிணைக்கும் என்பது தற்போது தெரியவில்லை.
தொடர்ந்து படிக்க
ஓபன்ஏஐ-இன் சாட் ஜிபிடி
OpenAI-யின் இந்த ChatGPT சாட்பாட்டை, சென்ற ஆண்டு நவம்பர் 30 -ஆம் தேதியன்று வெளியிட்டது.
இந்த சாட்பாட், பயனர் கேள்விகளின் அடிப்படையில், ஒரு சகமனித உரையாடலைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAIஇல், மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்கா டாலர் மதிப்பில், 1 பில்லியன் முதலீடு செய்துள்ளது.
தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட்டின் வாடிக்கையாளர் பயன்பாடுகளில் சில, ஓபன் எஐ-இன் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
மைக்ரோசாஃப்ட்டின், Azure சர்வர் மற்றும் கம்ப்யூட்-பவர் ஆகியவற்றின் ஒரு பகுதியாக, நிறுவன வாடிக்கையாளர்களுக்கு GPT-3 மற்றும் Dall-E 2 ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.
கோ-பைலட், ஓபன்-எஐ இன் கருவிகளைப் பயன்படுத்தி, மென்பொருள் பொறியாளர்களுக்கு தானாகவே குறியீட்டை உருவாக்க உதவுகிறது.