
மைக்ரோசாஃப்டில் மீண்டும் ஆட்குறைப்பு? இந்த முறை டார்கெட் மேனேஜர்கள்
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த முறை நடுத்தர மேனேஜர் நிலையில் உள்ள பணியாளர்களை குறிவைத்து, மற்றொரு சுற்று பணிநீக்கங்களுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியான அறிக்கையின்படி, நிறுவனம் பொறியாளர்களின் விகிதத்தை தொழில்நுட்பம் அல்லாத ஊழியர்களுக்கு அதிகரிப்பதன் மூலம் அதன் பணியாளர்களின் எண்ணிக்கையை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மே மாத தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படும் சாத்தியமான ஆட்குறைப்பு முதலில் பிசினஸ் இன்சைடரால் தெரிவிக்கப்பட்டன.
இருப்பினும் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் சரியான எண்ணிக்கை தெளிவாக இல்லை.
இந்த நடவடிக்கை மைக்ரோசாப்டின் தயாரிப்பு அல்லது நிரல் மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் விகிதத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்.
விகிதம்
தற்போதைய விகிதம்
அறிக்கையின்படி, மைக்ரோசாஃப்டின் பாதுகாப்புப் பிரிவு தற்போது ஒரு தயாரிப்பு மேலாளருக்கு 5.5 பொறியாளர்கள் என்ற விகிதத்தில் செயல்படுகிறது.
இதை 10:1 என்ற அளவில் புதிய இலக்குடன் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.
மைக்ரோசாஃப்டின் பாதுகாப்புத் தலைவர் சார்லி பெல் ஏற்றுக்கொண்ட இந்த அளவீடு, திட்ட மேலாளர்கள் மற்றும் பிற குறியீட்டு அல்லாத பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அமேசானின் பில்டர் ரேஷியோ உத்தியை பிரதிபலிக்கிறது.
கூகுள் மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதேபோன்ற திட்டங்களை செயல்படுத்தி மேலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருவதாக கூறப்படுகிறது.