Facebook, Instagram மற்றும் Threads முழுவதும் AI-யால் உருவான படங்களை குறிப்பிடும் மெட்டா
Facebook, Instagram மற்றும் Threads போன்ற தளங்களில் AI-யால் உருவாக்கப்பட்ட படங்களை பயனர்கள் கண்டறிய உதவும் வகையில் மெட்டா தனது செயல்பாட்டை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தவறான தகவலை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல்களில் AI-இன் தாக்கம் பற்றிய கவலைகள் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மெட்டா. மெட்டாவின் குளோபல் விவகாரங்களின் தலைவர் நிக் கிளெக், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஆடியோ கிளிப்புகள் செயற்கை நுண்ணறிவு துணையுடன் உருவாக்கப்பட்டதா என்பதைக் காட்டும் குறிப்பான்களுக்கான தரநிலைகளை உருவாக்குவதற்காக, மெட்டா நிறுவனம் தன்னுடைய தொழில் கூட்டாளர்களுடன் கூட்டு சேர்கிறது என்று குறிப்பிட்டார்.
இது எப்படி வேலை செய்யும்?
மெட்டா நியூஸ்ரூம் அறிவிப்பில், உருவாக்கப்படும் கருவிகள் IPTC மற்றும் C2PA தரநிலைகளுக்கு ஏற்ப கண்ணுக்குத் தெரியாத சமிக்ஞைகளைக் கண்டறியும் என்று கிளெக் விளக்கினார். கூகுள், அடோப், Midjourney, ஓபன் ஏஐ, மைக்ரோசாஃப்ட் மற்றும் ஷட்டர்ஸ்டாக் போன்ற பெரிய நிறுவனங்களின் AI டூல்ஸ் கொண்டு உருவாக்கப்படும் படங்களை Metaவால் லேபிளிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற டூல்ஸ் மூலம் தயாரிக்கப்படும் ஃபேக் வீடியோக்களை கண்டுபிடிக்க இன்னும் மெட்டா நிறுவனத்திடம் தொழில்நுட்பம் இல்லை எனவும் நிக் கிளெக் கூறியுள்ளார். அது நடக்கும் வரை, பயனர்கள் அத்தகைய உள்ளடக்கத்தை தாங்களாகவே லேபிளிடுவார்கள் என்று மெட்டா நம்புகிறது. அதே நேரத்தில், OpenAI, அதன் DALL-E 3 மாடலால் உருவாக்கப்பட்ட படங்களுக்கு வாட்டர்மார்க் சேர்க்கத் தொடங்கவும் முடிவு செய்துள்ளது.