மெசெஞ்சர் சேவையில் எண்டு-டூ-எண்டு வசதியை அறிமுகப்படுத்தும் மெட்டா
ஃபேஸ்புக்கின் ஒரு அங்கமான மெஸெஞ்சர் சேவையில் எண்டு-டூ-எண்டு என்கிரிப்சன் வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா. தற்போது வாட்ஸ்அப்பில் வழங்கப்பட்டு வரும் இந்த வசதியை அடுத்ததாக மெசெஞ்சர் சேவையில் வழங்கத் தொடங்கியிருக்கிறது மெட்டா. இந்த எண்டு-டூ-எண்டு வசதியைக் கொண்டிக்கும் தளங்களில், பயனாளர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை, அதன் பெறுநர் தவிர, இடையில் வேறு யாராலும் இடைமறித்துத் தெரிந்து கொள்ள முடியாது. இதன் மூலம் பாதுகாப்பான பயன்பாட்டைப் பெறுவதுடன், பயனாளர்கள் தங்களது தகவல் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள முடியும். தற்போது அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தாலும், உலகளவில் அனைத்து பயனாளர்களும் இந்த வசதியைப் பெற இன்னும் சில மாதங்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதியா? பாதுகாப்புக் குறைபாடா?
வாட்ஸ்அப்பைப் போல இல்லாமல், நாம் யாரென்றே தெரியாதவர்களுடனும் நட்பு பாராட்டும் இடமாக இருக்கிறது மெட்டா. அப்படி இருக்கும் போது, அதன் ஒரு அங்கமான மெசெஞ்சரில் எண்டு-டூ-எண்டு வசதியை அளிப்பதை பாதுகாப்புக் குறைபாடாகவே கருதுவதாக சில குரல்கள் எழுந்திருக்கின்றன. முக்கியமாக பதின்வயது மற்றும் அதற்குக் கீழே இருக்கும் குழைந்தைகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த வசதியை மெசெஞ்சரில் அளிக்கக் கூடாது என பிரிட்டனின் முன்னாள் உள்துறை செயலாளர் சுயூலா பிரேவர்மேன் கருத்து தெரிவித்திருந்தால். தங்களது சமூக வலைத்தளங்களை அனைவருக்குமான பாதுகாப்பான தளமாக இருப்பதை மெட்டா உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.