Loading...
GPT-6-க்கு போட்டியாக மெட்டாவின் பிரம்மாண்ட AI மாடல்கள்! மியூஸ் வொண்டர் சிறப்பம்சங்கள் என்ன?
GPT-6-க்கு போட்டியாக Meta பிரம்மாண்ட AI மாடல்கள் அறிமுகப்படுத்தியுள்ளது

GPT-6-க்கு போட்டியாக மெட்டாவின் பிரம்மாண்ட AI மாடல்கள்! மியூஸ் வொண்டர் சிறப்பம்சங்கள் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
10:28 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவுத் துறையில் அடுத்தகட்ட பாய்ச்சலாக, மெட்டா நிறுவனம் தனது முதல் அதிநவீன எல்லைப்புற மாடல்களான மியூஸ் வொண்டர் மற்றும் மியூஸ் வொண்டர் ஃபுல் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாவின் சூப்பர்பெர்செப்ஷன் லேப் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏஐ மாதிரிகள், முந்தைய 'மியூஸ் ஸ்பார்க்' பதிப்பைக் காட்டிலும் பன்மடங்கு திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சாப்ட்வேர் டெவலப்மெண்ட், ஆப் மற்றும் கேம் உருவாக்கம், நிதி, சட்டம் மற்றும் சுகாதாரம் சார்ந்த நீண்ட காலப் பணிகளை துல்லியமாகக் கையாளும் வகையில் மேம்பட்ட பகுத்தாய்தல் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

புதிய மாடல்களின் சிறப்பம்சங்கள்

பயனர்கள் வழங்கும் தகவல்களை வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பாதுகாப்பாக நினைவில் வைத்துக்கொண்டு ஒருங்கிணைக்கும் 'ஆக்டிவ் மெமரி' தொழில்நுட்பம் இதில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் 'MemoryBench' சோதனைகளில் மற்ற முன்னணி மாடல்களை இது பின்னுக்குத் தள்ளியுள்ளது.

மெட்டாவின் சோதனைகளின்படி, இந்த புதிய மாடல்கள் சந்தையில் உள்ள முன்னணி மாடல்களான ஃபேபிள் 5.1 மற்றும் ஜிபிடி-6 அஸ்ட்ரா ஆகியவற்றுக்கு இணையான பெஞ்ச்மார்க் மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

விலை

விலை மற்றும் கிடைக்கும் முறை

மியூஸ் வொண்டர்: இது மெட்டா மாடல் ஏபிஐ மூலம் டெவலப்பர்களுக்குக் கிடைக்கிறது. இதன் விலை ஒரு மில்லியன் உள்ளீட்டு டோக்கன்களுக்கு (Input Tokens) $4 என்றும், வெளியீட்டு டோக்கன்களுக்கு (Output Tokens) $20 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது ஜிபிடி-6 சோல் விலையை ஒத்தது.

மியூஸ் வொண்டர் ஃபுல்: மிகவும் சக்திவாய்ந்த இந்தக் கூடுதல் பதிப்பு பொது API மூலம் கிடைக்காது. இது மாதத்திற்கு $50 முதல் $200 வரை கட்டணம் செலுத்தும் 'மியூஸ் கோட்' சந்தாதாரர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT