Page Loader
புதிய சுற்று பணிநீக்கத்தை நடத்தி முடித்திருக்கும் மெட்டா.. இந்தியாவின் முக்கிய நிர்வாகிகளும் பணிநீக்கம்!
புதிய சுற்று பணிநீக்கத்தை நடத்தி முடித்திருக்கும் மெட்டா

புதிய சுற்று பணிநீக்கத்தை நடத்தி முடித்திருக்கும் மெட்டா.. இந்தியாவின் முக்கிய நிர்வாகிகளும் பணிநீக்கம்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 26, 2023
09:26 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மெட்டா. அதனைத் தொடர்ந்து மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது அந்நிறுவனம். அதன்படி பல சுற்றுகளாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய சுற்று பணிநீக்கத்தை நடத்தி முடித்திருக்கிறது மெட்டா. இந்த சுற்றில் மெட்டாவின் வணிகம் மற்றும் செயல்பாட்டு பிரிவைச் சேர்ந்த பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அந்நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பலர் இது குறித்து தங்களது லிங்க்டுஇன் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த கடைசி பணிநீக்க சுற்றில் இந்தியாவின் முக்கியமான பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் பலரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

மெட்டா

ஏன் பணிநீக்கம்: 

வருவாயைப் பெருக்கவும், செலவுகளைக் குறைக்கவுமே இந்த பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறது மெட்டா. இத்துடன் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 21,000 ஊழியர்கள் அந்நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த பணிநீக்கங்களை செலவுகளைக் குறைப்பதற்காக மட்டுமின்றி, நிறுவனத்தின் திறனை அதிகரிக்கவுமே என அந்நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க். கடந்த சில ஆண்டுகளில் மெட்டா மட்டுமின்றி கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் அதிகளவில் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபாவும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.