
நீங்கள் வழிகாட்டக்கூடிய மனித உருவிலுள்ள AI ரோபோவான மென்டீபோட்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனமான மென்டீ ரோபோட்டிக்ஸ், 'மென்டீபோட்' என்ற மனித அளவிலான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொறியியலின் இந்த மேம்பட்ட சாதனை "நீங்கள் வழிகாட்டக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட AI- அடிப்படையிலான ரோபோவாக" சந்தைப்படுத்தப்படுகிறது.
ஓடுதல், பக்கவாட்டில் நடப்பது மற்றும் எளிதாகத் திரும்புதல் உள்ளிட்ட மனிதனைப் போன்ற சமநிலை மற்றும் கட்டுப்பாட்டுடன் பணிகளைச் செய்யக்கூடிய வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.
அதேபோல கனமான பொருட்களை தூக்கும் போது தனது நடையை அதற்கேற்றவாறு தானே சரிசெய்யும் திறன், இயற்கையான மொழி கட்டளைகளைப் புரிந்து கொள்ளும் திறனையும் இது கொண்டுள்ளது.
மென்டீபோட் அதன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் மற்ற மனித உருவ ரோபோக்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது.
தொழில்நுட்பம்
மெண்டீபோட்: மனித உருவ ரோபாட்டிக்ஸில் ஒரு பாய்ச்சல்
ஹோண்டாவின் அசிமோ அல்லது பாஸ்டன் டைனமிக்ஸின் படைப்புகளைப் போலல்லாமல், மென்டீபோட் AI வழிமுறைகள் மற்றும் இயற்கை மொழி செயலாக்க மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த ரோபோடில், மேம்பட்ட பயிற்சி நுட்பங்களை எளிதாக்கும் மென்பொருளும் உள்ளடங்கியுள்ளது.
இந்த தனித்துவமான தொழில்நுட்பக் கலவையானது, ஒரு குறிப்பிட்ட கட்டளைத் தொகுப்பின் வரம்புகளைத் தாண்டி, இயற்கையான மொழியில் கொடுக்கப்பட்ட கட்டளைகளைப் புரிந்துகொள்ளவும், பதிலளிக்கவும் ரோபோவை செயல்படுத்துகிறது.
மெண்டீபோட்டுக்கான பயிற்சி செயல்முறை மிகவும் எளிது. இந்த ரோபோவின் டிஜிட்டல் பதிப்பை ஒரு குறிப்பிட்ட பணியினை மீண்டும் மீண்டும் தந்து, அது தேர்ச்சி பெறும் வரை ட்ரைன் செய்யவேண்டும். பயிற்சி பெற்றவுடன், ரோபோ நிஜ வாழ்க்கையில் அந்த பணியை சுளுவாக செய்ய முடியும்.
வெளியீடு
மென்டீபோட்டின் வெளியீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை
மென்டீபோட் 2025இல் வெளியிடப்பட உள்ளது.
மேலும் இது இரண்டு பதிப்புகளில் கிடைக்கும்: வீட்டு வேலைகளுக்கான ஹவுஸ் போட் மற்றும் கடினமான வேலைகளை செய்யும் பணிகளுக்கான வணிக போட்.
இதன் அதிகாரப்பூர்வ விலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதன் மேம்பட்ட திறன்கள் மற்றும் அளவு காரணமாக இது நான்கு இலக்க விலைக் குறியீடு வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
68 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த சுறுசுறுப்பான மனித உருவ ரோபோ, AI தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்வில் ஒரு அற்புதமான புதிய வழியில் கொண்டு வர உறுதியளிக்கிறது.