NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செவ்வாய்-ஐ நெருங்கும் வியாழன்: பூமியிலிருந்து தென்படவுள்ள வான நிகழ்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    செவ்வாய்-ஐ நெருங்கும் வியாழன்: பூமியிலிருந்து தென்படவுள்ள வான நிகழ்வு
    இரண்டு கிரகங்களும் நமது இரவு வானில் மிக நெருக்கமாகத் தோன்றும்

    செவ்வாய்-ஐ நெருங்கும் வியாழன்: பூமியிலிருந்து தென்படவுள்ள வான நிகழ்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 12, 2024
    07:55 am

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாய் மற்றும் வியாழன் இந்த தசாப்தத்தின் மிக நெருக்கமான சந்திப்பிற்காக தயாராகி வருகின்றன.

    இது பூமியிலிருந்து தெரியும் ஒரு அரிய வான நிகழ்வு. புதன்கிழமையன்று, இரண்டு கிரகங்களும் நமது இரவு வானில் மிக நெருக்கமாகத் தோன்றும்.

    எவ்வளவு நெருக்கம் என்றால் அவற்றுக்கிடையே ஒரு மெல்லிய பிறை நிலவு மட்டுமே நுழைய முடியும்.

    பூமியிலிருந்து பார்க்கையில் இவ்வளவு அருகாமை இருந்தபோதிலும், அவை உண்மையில் அந்தந்த சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட்ட 575 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.

    வான நிகழ்வு

    கிரக இணைப்பு: ஒரு அரிய வான நிகழ்வு

    செவ்வாய் மற்றும் வியாழன் இடையே தென்படவுள்ள இந்த நெருக்கம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை பகல் நேரத்தில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்த ஜான் ஜியோர்ஜினி, வானம் இருட்டாக இருக்கும்போது சில மணிநேரங்கள் அல்லது ஒரு நாள் முன்னதாகவே அவற்றின் தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது என்று கூறியுள்ளார்.

    குறிப்புகள்

    சிறந்த காட்சிகள் மற்றும் அறிவியல் முக்கியத்துவம்

    இந்த கிரக இணைப்பின் மிகவும் தெளிவான காட்சிகள் கிழக்கு வானத்தில் டாரஸ் விண்மீனை நோக்கி விடியும் முன் இருக்கும்.

    கிரக இணைப்புகள் எனப்படும் இந்த அண்ட இணைவுகள் தோராயமாக ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் நிகழும்.

    ஜியோர்ஜினி இந்த நிகழ்வுகளை "பெரும்பாலும் வானத்தைப் பார்ப்பவர்களுக்கு ஆர்வம் மற்றும் அழகுக்கான பொருட்கள்" என்று விவரித்தார்.

    மேலும் "விஞ்ஞானம் நிகழ்வுகளை ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாகக் கணிக்கும் திறனில் உள்ளது" என்றும் கூறினார்.

    வரலாற்றுக் கண்ணோட்டம்

    செவ்வாய் மற்றும் வியாழனின் கடந்த கால மற்றும் எதிர்கால ஒருங்கிணைப்பு

    செவ்வாய் மற்றும் வியாழன் கடைசியாக 2018 இல் நெருக்கமாக இருந்தது. அடுத்து, 2033 வரை அவை நெருங்காது என கணிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மில்லினியத்தில் இந்த இரண்டு கோள்களின் மிக நெருக்கமான ஒருங்கிணைப்பு 1761 இல் நிகழ்ந்தது.

    அப்போது செவ்வாய் மற்றும் வியாழன் சாதாரண கண்களுக்கு ஒரு பிரகாசமான பொருளாகத் தோன்றியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    அடுத்ததாக இந்த செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்கள் கிட்டத்தட்ட 2348 இல் மீண்டும் நெருங்கி வரும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானியல்
    விண்வெளி
    பூமி
    நாசா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வானியல்

    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! உலகம்
    வேற்றுகிரக விண்வெளிப் பொருட்களைக் கண்டறிந்த ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி
    சந்திர கிரகணம்: அற்புத விண்வெளி நிகழ்வை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி? சந்திர கிரகணம்
    NOVA நட்சத்திரம் உருவாவதை விரைவில் காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது நாசா

    விண்வெளி

    சென்னை மக்களே..இன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாமாம்! சென்னை
    விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி தேசிய கொடியை ஏந்தி பரவசம்  அமெரிக்கா
    அமெரிக்காவின் செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து ரஷ்யா ஏவிய விண்வெளி ஆயுதம்: அமெரிக்கா குற்றசாட்டு அமெரிக்கா
    ஜூன் 3 அன்று வானத்தில் நடக்கவுள்ள ஒரு அபூர்வ அணிவகுப்பு: எப்படி பார்க்க வேண்டும்? தொழில்நுட்பம்

    பூமி

    ஏன் பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும்? ஸ்மார்ட்போன்
    விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா நாசா
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? சந்திரன்
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    நாசா

    'ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறது அமெரிக்கா': நாசா தலைவர் அறிவிப்பு  இந்தியா
    'விண்வெளியில் தொலைந்த தக்காளிகள்' குறித்த நாசாவின் சுவாரஸ்ய வீடியோ பதிவு அறிவியல்
    50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய பயணம்: வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் பெரேக்ரின் லேண்டர் அமெரிக்கா
    பூமியை நெருங்க இருக்கும் "சிட்டி கில்லர்" சிறுகோள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை  விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025