இந்தியாவில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டு, கனடாவில் அமேசானில் சேர சென்ற நபருக்கு, காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில், பெங்களூருவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்த அருஷ் நாக்பால், கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், நாக்பால் வான்கூவருக்கு பயணம் செய்யும் முதல் நாள், தனது பணியமர்த்தல் மேலாளருடன் பேசியதாகவும்,அப்போது தான் தனது பணி ஆணை திரும்ப பெற பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இது குறித்து linkedin இல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "மைக்ரோசாப்டில் உள்ள அற்புதமான நபர்களுடன் சிறிது நேரம் செலவழித்த பிறகு, நான் அமேசான் கனடாவில் சேர வான்கூவருக்குச் செல்ல முடிவு செய்தேன், ஆனால் நீண்ட குடியேற்ற செயல்முறைக்குப் பிறகு, கனடாவில் நான் சேரும் நாள் நெருக்கத்தில், எனது பணி ஆணை ரத்து செய்யப்பட்டது", என்று அவர் தெரிவித்து இருந்தார்.
கனடாவில் அமேசானில் வேலைக்கு சேர சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
"நான் எனது அறிவிப்புக் காலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வழங்கி விட்டேன். ஏற்கனவே வான்கூவருக்கு மாற்றப்பட்டு எனது பணி அனுமதியையும் பெற்றுள்ளேன்."என்று அவர் கூறியுள்ளார். அமேசான் சமீப காலங்களில் பணிநீக்கத்தில் ஈடுபட்டுள்ளது. புதிய பணியாளர்களின் பணி நியமத்தையும் ரத்து செய்துள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு, கூகுள் இன்ஜினியர் ஒருவர் இதேபோன்ற சூழ்நிலையை சந்தித்தார். அமேசான் நிறுவனத்தில் சேர்வதற்காக, கூகிள் வேலையை விட்டுவிட்டார். பணியில் சேருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அவரது வேலை வாய்ப்பு ரத்து செய்யப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் ஒரு H1-B விசா வைத்திருப்பவர், அதாவது அவர் ஒரு புதிய வேலையைத் தேட அல்லது தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப 60 நாட்கள் மட்டுமே இருந்தது.