LOADING...
MakeMyTrip-இன் புதிய AI கருவி மூலம் ஹோட்டல்களை கண்டுபிடிப்பதும், புக் செய்வதும் ஈஸி
MakeMyTrip, செமண்டிக் தேடல் என்ற புதிய AI அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

MakeMyTrip-இன் புதிய AI கருவி மூலம் ஹோட்டல்களை கண்டுபிடிப்பதும், புக் செய்வதும் ஈஸி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2025
06:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பயண நிறுவனங்களில் ஒன்றான MakeMyTrip, செமண்டிக் தேடல் என்ற புதிய AI அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை கண்டுபிடிக்கும் செயல்முறையை வாடிக்கையாளர்களுக்கு எளிதாக்கும் வகையில் இந்த புதுமையான கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகள் தங்குமிடத்தைத் தேடுவதற்கு இயல்பான மொழியையும், எளிய விளக்கங்களையும் பயன்படுத்த அனுமதிக்கிறது, சிக்கலான filter-களின் தேவையை நீக்குகிறது.

AI பரிணாமம்

Semantic Search திறந்தநிலை வினவல்களை புரிந்துகொள்கிறது

இந்த செமாண்டிக் தேடல் கருவி, மேக்மைட்ரிப் சமீபத்தில் அறிமுகப்படுத்திய "மைரா" பயண உதவியாளரைப் போலவே அதே AI தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நோக்கத்தை மையமாகக் கொண்டு, open ended கேள்விகளைப் புரிந்துகொண்டு பதிலளிக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடுமையான தேடல் ஃபில்டர்களுக்கு ஒரு எளிய மாற்றவும். உதாரணமாக, "மணாலியில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற ஹோட்டல்கள்" போன்ற மிகவும் குறிப்பிட்ட கோரிக்கைகளை அனுமதிக்கிறது. "ஜெய்ப்பூருக்கு அருகில் நீச்சல் குளம் அல்லது பாரம்பரிய தங்குமிடங்களுடன்பார்க்கிங் வசதியுடன் கூடிய கோட்டைகள்" போன்ற திறந்த நிலை கேள்விகளை கேட்கலாம்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்

விரைவான முடிவுகளை எடுக்க AI ஸ்மார்ட் பரிந்துரைகள்

Semantic search கருவி AI ஸ்மார்ட் பரிந்துரைகளுடன் வருகிறது. இவை "கோவாவில் கடற்கரையோர ஹோட்டல்கள்" அல்லது "மலைக் காட்சிகளுடன் ஊட்டி தங்கும் இடங்கள்" போன்ற பரிந்துரைகளுடன் அவற்றின் கவர்ச்சியை விளக்கும் குறிச்சொற்களும் (எடுத்துக்காட்டாக, "குடும்பங்களுக்கு ஏற்றது" அல்லது "தனிப்பட்ட நீச்சல் குளங்கள் கிடைக்கின்றன") போன்ற பரிந்துரைகளை வழங்கும். இந்த அம்சம் பயனர்களுக்கான கண்டுபிடிப்பு மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

தயாரிப்பு மேம்பாடு

மைராவின் அறிமுகத்தை தொடர்ந்து Semantic Search

MakeMyTrip இன் தலைமை தயாரிப்பு அதிகாரி அங்கித் கன்னா கூறுகையில், பயணிகளின் பயணத்தின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான சரியான தங்குமிடத்தை கண்டுபிடிப்பதை நிறுவனம் எளிதாக்கி வருகிறது. பயனர்களை ஒரு குறுகிய அமைப்பில் சிந்திக்க கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, மக்கள் இயல்பாகவே தங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் ஒரு அமைப்பை அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று அவர் வலியுறுத்தினார். கண்டுபிடிப்பு மற்றும் முன்பதிவு முதல் பயணத்தில் ஆதரவு வரை அனைத்தையும் கையாளும் மைராவின் பீட்டா வெளியீட்டிற்குப் பிறகு Semantic search tool அறிமுகமாகியுள்ளது.