சர்வதேச சந்தையில் புதிய 'மேஜிக் V2' ஃபோல்டபிள்ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஹானர்
கடந்த ஜூலையில் சீனாவில் வெளியான 'மேஜிக் V2' மற்றும் 'V பர்ஸ்' ஆகிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை, தற்போது சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது ஹானர். வெறும் 231கி எடையுடன், மிகவும் மெல்லிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக வெளியாகியிருக்கிறது மேஜிக் V2. 2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் பிற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போனை ஹானர் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. வெளிப்புறம் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.43 இன்ச் OLED டிஸ்பிளேவையும், உட்புறம் 7.92 இன்ச் OLED டிஸ்பிளேவையும் பெற்றிருக்கிறது ஹானர் மேஜிக் V2. பின்புறம் 50MP, 50MP மற்றும் 20MP ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு டிஸ்பிளேக்களிலும் 16MP செல்ஃபி கேமராக்களை இரண்டைக் கொடுத்திருக்கிறது ஹானர்.
ஹானர் மேஜிக் V2: ப்ராசஸர் மற்றும் விலை
இந்தப் புதிய ஃபிளாக்ஷிப் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில், குவால்காமின் ஃபிளாக்ஷிப் ப்ராசஸரான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸரைக் கொடுத்திருக்கிறது குவால்காம். மேலும், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியையும் புதிய மேஜிக் V2வில் கொடுத்திருக்கிறது ஹானர். 5G, வைபை 802.11ax, ப்ளூடூத் 5.3 LE, NFC, யுஎஸ்பி 3.1 மற்றும் டைப்-சி ஆகிய கனெக்டிவிட்டி வசதிகளைக் கொண்டிருக்கிறது ஹானரின் புதிய ஃபோல்டபிள் மேஜிக் V2. சீனாவில் இந்த மொபைலின் அடிப்படை வேரியன்டை இந்திய மதிப்பில் ரூ.1.03 லட்சம் விலையிலும், டாப் எண்டை ரூ.1.14 லட்சம் விலையிலும் வெளியிட்டிருந்தது ஹானர்.