Loading...
ஏஐ உருவாக்கிய போஸ்ட்களுக்கு செக்! லிங்க்ட்இன் புதிய நடவடிக்கை
லிங்க்ட்இன்

ஏஐ உருவாக்கிய போஸ்ட்களுக்கு செக்! லிங்க்ட்இன் புதிய நடவடிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2026
03:40 pm

செய்தி முன்னோட்டம்

தொழில்முறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை சமூக வலைதளமான லிங்க்ட்இன், தங்களது தளத்தில் பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற பதிவுகளை புகாரளிக்கும் வகையில் 'Seems like AI slop' என்ற புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. லிங்க்ட்இன் தளத்தில் பகிரப்படும் நீண்ட பதிவுகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை மனிதர்களால் எழுதப்படாமல், செயற்கை நுண்ணறிவு மூலமே உருவாக்கப்படுகின்றன என்ற ஆய்வு முடிவு வெளியான சில நாட்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் அதிர்ச்சி

41% பதிவுகள் ஏஐ மூலம் உருவாக்கம்

பேங்க்ராம் என்ற அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில், லிங்க்ட்இனில் பகிரப்படும் 41 சதவீத நீண்ட கட்டுரைகள் மற்றும் பதிவுகள் முற்றிலும் ஏஐ தொழில்நுட்பத்தினால் மட்டுமே உருவாக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லிங்க்ட்இன் முதன்மை தயாரிப்பு அதிகாரி ஹரி சீனிவாசன், "AI Slop எனப்படும் போலி அல்லது தரம் குறைந்த ஏஐ பதிவுகளைக் கட்டுப்படுத்துவது எங்களின் முதன்மை முன்னுரிமையாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுப்பாடு

போலி பதிவுகளையும் பாட்களையும் கட்டுப்படுத்தும் முயற்சி

இந்த புதிய புகாரளிக்கும் பட்டன் மூலம் பயனர்கள் அளிக்கும் கருத்துகள், லிங்க்ட்இனின் சொந்த ஏஐ மாடல்களுக்கு பயிற்சி அளித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தானியங்கி ஏஐ பதிவுகளை தொடக்கத்திலேயே கண்டறிய உதவும்.

மேலும், நாள்தோறும் லட்சக்கணக்கான போலி கமெண்ட்டுகளையும், பல மில்லியன் பாட் ஊடுருவல் முயற்சிகளையும் லிங்க்ட்இன் தடுத்து நிறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

ஏஐ அச்சுறுத்தல்

பிற சமூக வலைதளங்களிலும் அதிகரிக்கும் ஏஐ அச்சுறுத்தல்

ஏஐ போஸ்ட் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முதல் தளம் லிங்க்ட்இன் மட்டுமல்ல.

சப்ஸ்டேக் நிறுவனமும் சமீபத்தில் ஏஐ பதிவுகளைக் கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியது.

அதேபோல் டிக் தளம் பாட்களின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த முடியாமல் கடந்த மார்ச் மாதம் தனது சேவையை மூடியது குறிப்பிடத்தக்கது.

கிளவுட்ஃப்ளேர் தகவல்படி, தற்போது இணையத்தில் மனிதர்களின் ட்ராஃபிக்கை விட பாட்களின் ட்ராஃபிக்கே அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT