ஜியோஹோம் தீபாவளி ஆஃபர்: 10 மாத ரீசார்ஜிற்கு 5 மாத வைஃபை இலவசம்; எப்படி பெறுவது?
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோஹோம் ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தீபாவளி ஆஃபரை அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் வீடுகளில் இன்டர்நெட் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால் இப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் 10 மாதக் கட்டணத்தில் 15 மாத சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன் மூலம் வைஃபை, நேரலை டிவி மற்றும் ஓடிடி பயன்பாடுகளுக்கு தனித்தனியே பணம் செலவழிப்பதைத் தவிர்க்க இயலும்.
சிறப்பம்சங்கள்
₹6,660 ரீசார்ஜ் திட்டமும் அதிலுள்ள சிறப்பம்சங்களும்
சலுகையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் மாதம் ₹666 மதிப்பிலான திட்டத்தில் 10 மாதங்களுக்கு ஒரே நேரத்தில் ₹6,660 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
அவ்வாறு ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் 5 மாதங்களுக்கான சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தவிதக் கூடுதல் கட்டணமும் இன்றி 15 மாதங்களுக்கு அதிவேக இன்டர்நெட்டைப் பயன்படுத்தலாம்.
இது வழக்கமான மாதந்திர ரீசார்ஜ் திட்டங்களை விடப் பெருமளவில் பணத்தை மிச்சப்படுத்தும்.
பெறுவதற்கான வழிமுறைகள்
ஆஃபரைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள்
இந்த தீபாவளி ஆஃபரைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 8219582195 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
அந்த அழைப்பு தானாகத் துண்டிக்கப்பட்டவுடன் ஜியோ நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி வரப்பெறும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி வாடிக்கையாளர்கள் சலுகையைத் தங்களது கணக்கில் எளிதாக செயல்படுத்திக் கொள்ள முடியும்.
பதிவு செய்த மொபைல் எண்ணை மட்டுமே இதற்கு பயன்படுத்த வேண்டும்.
புதிய வாடிக்கையாளர்கள்
புதிய வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகை விபரம்
ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி, புதிதாக ஜியோஹோம் இணைப்பைப் பெற விரும்புபவர்களுக்கும் ஜியோ சிறப்பு சலுகையை வழங்குகிறது.
இதன்படி புதிய வாடிக்கையாளர்கள் ₹2,122 செலுத்தி 2 மாதத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, கூடுதலாக 1 மாதம் இலவசமாக பெற்று மொத்தம் 3 மாத சேவையைப் பெறலாம்.
இத் திட்டத்தில் 100Mbps அதிவேக இன்டர்நெட் கிடைப்பதுடன், 1000-க்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பல முன்னணி ஓடிடி தளங்களின் சந்தாக்களும் அடங்கும்.