எக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்: ISRO வெளியீடு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறது. இஸ்ரோவின் எக்ஸ்போ சாட் செயற்கைகோள் கடந்த ஜனவரி 1ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள், விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா போன்றவை குறித்து ஆராயவே அனுப்பப்பட்டது. கூடுதலாக, காலநிலை பற்றிய ஆய்வுகளுக்காக, 'வெசாட்' என்ற செயற்கைக்கோளும், பிறநாடுகளின் 10 செயற்கைக்கோள்களும், அதே ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன. இந்நிலையில் எக்ஸ்போ சாட், சூப்பர் நோவா உமிழ்வு என்று அழைக்கப்படும் விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை சேகரித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.