NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை வெற்றி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை வெற்றி

    இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை வெற்றி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்வெளித் திட்டத்தின் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

    இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கனவுத் திட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே சில சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.

    இதன் ஒரு அங்கமாக திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

    வெற்றி

    என்ஜின் சோதனை

    என்ஜின் சோதனையின் ஒரு பகுதியாக, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பயன்படுத்தப்படும் எஸ்.எம்.எஸ்.டி.எம் என்ஜின் சோதனைகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இந்த என்ஜினின் ஐந்தாம் கட்ட சோதனை 1700 வினாடிகளுக்கு நடைபெற்றது. முன்னதாக இதற்கான கவுண்டவுனை ஆரம்பித்த இஸ்ரோ, சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

    இஸ்ரோவின் மகேந்திரகிரி மையத்தின் இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் மேற்பார்வையில் இந்த சோதனை நடைபெற்றது.

    மேலும், திருவனந்தபுரம் திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோரும் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் என்ஜினின் சோதனை ஓட்டத்தை நேரில் கண்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ககன்யான்
    இஸ்ரோ
    விண்வெளி

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை
    தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு தமிழக அரசு

    ககன்யான்

    இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ இந்தியா
    ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி இந்தியா
    ககன்யான் விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் வீரர்கள் பட்டியலை இன்று பிரதமர் வெளியிடுவார் இஸ்ரோ
    4 ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி இஸ்ரோ

    இஸ்ரோ

    சூரியனை முதல் முறையாகப் படம்பிடித்த ஆதித்யா L1 விண்கலம் ஆதித்யா L1
    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது
    ஜனவரி 6இல் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் லக்ராஞ்சியன் புள்ளியை அடையும் : இஸ்ரோ தலைவர் ஆதித்யா L1
    ஜனவரி முதல் வாரத்தில் L1 புள்ளியை அடையவிருக்கும் ஆதித்யா L1 விண்கலம் ஆதித்யா L1

    விண்வெளி

    வியாழனின் சந்திரன் அயோவின் மேற்பரப்புக்குப் பின்னால் உள்ள மர்மம் வெளியானது நாசா
    மாணவர்களே! உங்களுக்காக இஸ்ரோவின் பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான்; பங்கேற்பது எப்படி? இஸ்ரோ
    விண்வெளியில் உலக சாக்லேட் தினத்தை கொண்டாடிய விண்வெளி வீரர்கள்; வைரலாகும் காணொளி சர்வதேச விண்வெளி நிலையம்
    ISS இல் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்? நிபுணர் விளக்குகிறார் சர்வதேச விண்வெளி நிலையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025