iOS, Android பயனாளர்களுக்கு டெலிகிராமின் புதிய அப்டேட்!
பிரபலமான டெலிகிராம் செயலி ஆனது iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அப்டேட்டில், புகைப்பட மேக்கர், ஈமோஜி செயல்பாடுகள், அரட்டை மொழிபெயர்ப்பு, சாட்டில் வரும் மீடியாவை தானாக சேமிப்பது என 10 முக்கிய அம்சங்களை கொண்டு வர உள்ளது. அதன்படி, டெலிகிராம் பயனாளர்களுக்கு தங்கள் கணக்குகள், குழுக்கள் மற்றும் சேனல்களுக்கான ஸ்டிக்கர், அனிமேஷன் ஈமோஜி போன்ற புதிய அம்சங்களை வெளியிடுகிறது. இவை, பிரீமியம் மற்றும் பிரீமியம் அல்லாத கணக்குகளுக்கு பொருந்தும். ஆனால், அரட்டை மொழிபெயர்ப்பு பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அடுத்து, உங்கள் கேலரியில் சேமிக்கப்படும் மீடியாவின் அளவைக் கட்டுப்படுத்த, டெலிகிராம் அனுமதிக்கிறது.
ஐஓஎஸ் ஆண்ட்ராட்ய்டு பயனளார்களுக்கான புதிய அப்டேட் என்னென்ன?
டெலிகிராம் ஆண்டு பிரீமியம் சந்தாவுக்கு 40% தள்ளுபடி வழங்குகிறது. ஓராண்டுத் திட்டத்தில் உங்களுக்கு $39.99 செலவாகும், தற்போதுள்ள $4.99/மாதத்திற்கு எதிராக $3.3/மாதம் என கணிக்கிடப்படும். ஆப்பிள் கூகுள் ஐடி உள்ளவர்களுக்கு புதிய ஈமோஜி உங்கள் டெலிகிராம் கணக்கிலிருந்து தற்செயலாக வெளியேறியிருந்தால், SMS குறியீடு தேவையில்லாமல் உங்கள் ஆப்பிள் அல்லது கூகுள் ஐடியைப் பயன்படுத்தி விரைவாக மீண்டும் உள்நுழையலாம். எனவே, சமீபத்திய அப்டேட் சுயவிவரப் படங்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஐகான்களுடன் தனிப்பயன் ஈமோஜியின் 10 புதிய தொகுப்புகளையும் சேர்க்கிறது. இது தனிப்பட்ட உரையாடல்களுக்கான பல ஈமோஜிகளின் கொண்டுவருகிறது.